அமாவாசையை பவுர்ணமியாக்கிய அபிராமி அம்மன் || Thirukadaiyur Amirthakadeswarar Temple


அபிராமி அம்மனை நீ்ங்காத பக்தியோடு வழிபட்ட பட்டரின் உயிரை அம்மன் காப்பாற்றிய நிகழ்வு இன்றளவும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள அபிராமி அம்மன் தன்னை மனமுருகி உண்மையான பக்தியோடு வழிபடுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து அவர்களை கொடிய இன்னல்களில் இருந்து காப்பார் என்பது ஐதீகம். தன்னை தினமும் பூஜிக்கும் சுப்பிரமணிய பட்டரை காப்பாற்ற அபிராமி அம்மன் தை அமாவாசை நாளை பவுர்ணமியாக்கிய நிகழ்வு பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.

தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை நாளில் பூம்புகாருக்கு சென்று கடலில் நீராடிவிட்டு திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.

அப்போது மன்னரின் வருகையை கூட கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார். சுப்பிரமணிய பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்டார். அப்போது அபிராமி அம்மனின் தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை பவுர்ணமி என கூறிவிட்டார். இதைக்கேட்ட மன்னர் இன்று இரவு பவுர்ணமி முழுநிலவு தோன்ற வேண்டும். இது தவறும் பட்சத்தில் உங்களுக்கு(சுப்பிரமணிய பட்டருக்கு) மரண தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

இருப்பினும் மனம் கலங்காத சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நோக்கி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். அப்போது 79 பாடலான ‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலை பாடிய உடன், அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி, தனது காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார். அந்த தோடு முழு நிலவாக வானில் ஒளி வீசி அமவாசையை பவுர்ணமியாக மாற்றியது. இந்த அதிசய நிகழ்வை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என சிறப்போடு அழைக்கப்பட்டார். அபிராமி அம்மனை நீ்ங்காத பக்தியோடு வழிபட்ட பட்டரின் உயிரை அம்மன் காப்பாற்றிய நிகழ்வு இன்றளவும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இதையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைஅமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment