இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.  பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கத்தை காட்டிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment