கணப் பொருத்தம் | Gana Porutham

கணப்பொருத்தம்

ஜோதிடத்தில் கணப்பொருத்தம் என்பது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இவை 27 நட்சத்திரங்களுக்கும் பொருந்தும் அவை
1. தேவ கணம்
2. மனித கணம்
3. ராட்சஸ கணம்

கணப்பொருத்தம் என்பது குணத்தை குறிக்கக்கூடிய பொருத்தமாகும் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இடையே இருக்கும் குணங்களை குறிக்கக்கூடியது கண பொருத்தம் இருந்தால் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் வாழ்வார்கள் கணப்பொருத்தம் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து குடும்ப வாழ்க்கை சுகமாக நடத்துகிறார்

தேவ கணத்தில் வரும் நட்சத்திரங்கள்


அஸ்வினி
மிருகசீரிஷம்
புனர்பூசம்
பூசம்
ஹஸ்தம்
சுவாதி
அனுஷம்
திருவோணம்
ரேவதி
இந்த ஒன்பது நட்சத்திரங்களும் தேவகணம் ஆகும்

மனித கணத்தில் வரும் நட்சத்திரங்கள்

பரணி
ரோகினி
திருவாதிரை
பூரம்
உத்திரம்
பூராடம்
உத்திராடம்
புரட்டாதி
உத்திரட்டாதி
இந்த ஒன்பது நட்சத்திரங்களும் மனித கணம் ஆகும்

ராட்சஸ கணத்தில் வரும் நட்சத்திரங்கள்

கார்த்திகை
ஆயில்யம்
மகம்
சித்திரை
விசாகம்
கேட்டை
மூலம்
அவிட்டம்
சதயம்

குறிப்பு

பெண் மற்றும் ஆண் இருவரும் ஒரே கணமாக இருந்தால் திருமணம் செய்யலாம், பெண் மற்றும் ஆண் இருவரில் எவரேனும் ஒருவர் தேவ கணமாக இருந்து மற்றவர் மனித கணமாக இருந்தால் திருமணம் செய்யலாம், ஆண் தேவகணம் ஆக இருந்து பெண் ராட்சஷ கணமாக இருந்தால் திருமணம் செய்வதை தவிர்க்கவும், பெண் தேவகணம் ஆக இருந்து ஆண் ராட்சஷ கணமாக இருந்தால் திருமணம் செய்யலாம் பெண் ராட்சஷ கணமாக இருந்து பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும்பொழுது ஆணின் நட்சத்திரம் 14 ற்கு பிறகு இருந்தால் இந்தப் பொருத்தம் உண்டு இவர்களுக்குத் திருமணம் செய்யலாம்

கணப்பொருத்தம் என்பது மிக முக்கியமான பொருத்தங்களில் ஒன்றாகும், இந்தப் பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம் ஆனால் தின பொருத்தம் கண்டிப்பாக அமைய வேண்டும் தினப்பொருத்தம், மற்றும் கணப்பொருத்தம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் தான் திருமண வாழ்வில் ஆண் மற்றும் பெண் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையுடன் வாழ்வார்கள்.
கணப் பொருத்தம்
கணப் பொருத்தம்

Social Media
Facebook : Horoscope Matching
Home Page : siddhaastrology.com

Leave a Comment