சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மார்ச் 10 முதல் 16ம் தேதி வரை  | vaara rasipalangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சிம்மம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் கேது – ரண ருண ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – சப்தம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு – தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

பலன்கள்:


இந்த வாரம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். புதிய நட்பு கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கலைத்துறையினர் விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். மனக் குழப்பம் நீங்கும். கடன் பிரச்சினை குறையும்.

***************

கன்னி:

கிரகநிலை:

தைர்ய ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு – பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய சப்தம ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

பலன்கள்:


இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரியத் தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மையைத் தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துகளுக்கு மாற்று கருத்து இருக்காது. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு மனதில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: ஆதிகேசவபெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.

******************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment