சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! – 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை | vaara rasipalangal

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் கேது ரண ருண ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி சப்தம ஆயுள் ஸ்தானத்தில் புதன், குரு தொழில் ஸ்தானத்தில் ராகு அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று கேது பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் இருந்த தாமதப்போக்கு நீங்கும். தேவையற்ற மன சஞ்சலம் அகலும். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மைதரும். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கெனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

*********************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைர்ய ஸ்தானத்தில் கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், குரு பாக்கிய ஸ்தானத்தில் ராகு சப்தம ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுர்யமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரத்து அதிகப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப்போக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் அடையலாம்.

நிதானமாக யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனக்குழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

*******************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment