சூரிய தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்.. || Surya Dev Dosha Pariharam


பெரும்பாலும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளதா இல்லையா என்று பலருக்கும் உறுதியாகத் தெரியாது. பலவிதமான அறிகுறிகள் அடிப்படையில் இதை உணர்ந்துகொள்ள முடியும்.

நம்முடைய புராணங்கள் அடிப்படையில் நவிரங்களுள் முதன்மையானது, அரசன் போன்றது சூரியன். இது பூமிக்கு, பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளி, வெப்பம், ஆற்றலைத் தருகிறது. அன்றாட நடவடிக்கைகளுக்கு சூரியன் தேவை.

பெரும்பாலும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளதா இல்லையா என்று பலருக்கும் உறுதியாகத் தெரியாது. பலவிதமான அறிகுறிகள் அடிப்படையில் இதை உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக தொடர்ந்து பலகீனமாக உள்ளவர்கள், சோம்பலாக உள்ளவர்கள், உடல் நலம் சரியாக இல்லாமல் இருப்பவர்கள், எலும்பு – மூட்டு பிரச்னை உள்ளவர்கள், கை – கால்கள் உணர்வின்மை பிரச்னை ஏற்படுபவர்கள், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள், இதய நோயாளிகள், சுய மரியாதை இன்றி மோசமாக வாழ்பவர்களுக்கு சூரியன் நீசமாக, பலம் இழந்து இருப்பதாக கருதலாம்.

சூரியன் நீசமாக இருந்தால் தந்தையுடன் உறவு நிலை மோசமாக இருக்கும். தந்தைக்கு பிரச்னையை ஏற்படுத்துவார்கள். மனநல பிரச்னையால் அவதியுறுவார்கள். மகிழ்ச்சி இன்றி இருப்பார்கள். உடல் ரீதியாவும் மன ரீதியாகவும் பிரச்னைகளை சந்திப்பார்கள். அதிகம் கோபம், ஆக்ரோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சூரியனை சாந்தப்படுத்தலாம். சூரிய தோஷம் நீங்க ராமரை வழிபடலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும் பலனைத் தரும்.

சூரியனை வழிபட பீஜ மந்திரம்:

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||

இதை 40 நாட்களுக்குள் 7000ம் தடவை சொல்லி வந்தால் நற்பலன்கள் கிடைக்கும். அதிக பலன்கள் கிடைக்க 40 நாட்களுக்குள் 28 ஆயிரம் முறை சொல்ல வேண்டும்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment