தனுசு, மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை | vaara rasipalangal

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன், குரு ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு விரைய ஸ்தானத்தில் கேது சுக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் அடுத்தவர் யோசனைகளைக் கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும், வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.

************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், சுக்கிரன், சனி தனவாக்கு ஸ்தானத்தில் புதன், குரு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு லாப ஸ்தானத்தில் கேது தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லறத்தில் சண்டைகள் ஏற்படலாம். பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

*****************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment