தினப்பொருத்தம் Thirumana Porutham

தினப் பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையே விட்டுக் கொடுத்தல் சகிப்புத்தன்மை போன்றவற்றை கூறுகிறது இந்த பொருத்தம் அமைந்தால் ஒவ்வொரு நாளும் திருநாளாக அமையும்

கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வராமல் குடும்ப வாழ்க்கையை காப்பது இந்த பொருத்தமாகும்

தின பொருத்தத்தை கணக்கிடும் முறை :-


பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணி வர வேண்டும் அவ்வாறு எண்ணி வருவதை 9 ஆல் வகுத்தால் நமக்கு இரட்டைப்படை எண் கிடைக்க வேண்டும் அதாவது 2, 4, 6, 8 மற்றும் 9 வந்தால் இந்தப் பொருத்தம் இருவருக்கும் உண்டு (தினப்பொருத்தம் உத்தமம்)

பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரத்தை எண்ணி வரும்பொழுது அந்த எண்ணின் தொகையானது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 26, 27, என்று வந்தால் தினப்பொருத்தம் இருவருக்கும் உண்டு (தினப்பொருத்தம் உத்தமம்)

பெண் நட்சத்திரமும் ஆண் நட்சத்திரமும் இரண்டும் ஒரே ராசியாக இருந்தால் இந்தப் பொருத்தம் உண்டு (தினப்பொருத்தம் உத்தமம்)

ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், மற்றும் புரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் தின பொருத்தம் இல்லை

வாழ்க்கை என்பது பலம் மற்றும் மேடுகள் நிறைந்தது திருமண பொருத்தத்தில் தினப் பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம் இவற்றினால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை

தின பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் என்பது இல்லை மேலும் இந்த பொருத்தம் இல்லையென்றால் கண பொருத்தத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தத்தில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக அமைய வேண்டும்

Leave a Comment