திரளான பக்தர்கள் சாமி தரிசனம் || namakkal anjaneyar Abhishekam


நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டதையும், திரண்டு இருந்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். அந்த வகையில் நேற்று பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் நாமக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment