திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா மே 4-ந்தேதி தொடங்குகிறது


திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது.

திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை பெருவிழா ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா வருகிற மே மாதம் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. சித்திரை பெருவிழா நடத்துவது குறித்து உற்சவ உபயதாரர்களின் ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கோவில் உற்சவம் தொடர்பாக நாள் தோறும் ஆலோ சனைகளை பெற வாட்ஸ்- அப் குழு தொடங்க முடிவு செய்யப்பட்டது.

உற்சவர் அலங்காரத்தை தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுவாமி புறப்பாடுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment