துலாம், விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மார்ச் 10 முதல் 16ம் தேதி வரை  | vaara rasipalangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்:

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய ரண ருண ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

பலன்கள்:


இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும் மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: துர்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும். மனக் கவலை தீரும்.

*********************

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் கேது – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு – சப்தம ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 15ம் தேதி சூர்ய பகவான் உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

பலன்கள்:


இந்த வாரம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலுவலகப் பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும்போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்துறையினருக்கு பூர்வீகச் சொத்துகள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

*****************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment