நத்தம் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா


நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா, கடந்த 7-ந்ேததி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். மேலும் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்தநிலையில் நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையொட்டி மாரியம்மன், பல்லக்கில் அம்மன்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment