பண்ணாரி அம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டர் இறங்கி வழிபாடு


கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு எளிமையாக விழா நடத்தப்பட்டு பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த விழாவில் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்குவார்கள்.

இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு எளிமையாக விழா நடத்தப்பட்டு பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் குண்டம் திருவிழா விமரி சையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் பண்ணாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலா நடந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

மேலும் குண்டம் பற்றவைக்க பக்தர்கள் காணிக்கையாக வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை கொண்டு வந்து கோவில் முன்பு குவியலாக போட் டார்கள். பொதுவாக குண்டம் இறங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பக்தர்கள் கோவில் முன்பு வந்து இடம்பிடித்து காத்திருப் பார்கள்.

ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக முதலில் இடம் பிடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த சேலை, வேட்டி, துண்டுகள் வைத்து இடம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திற்கு வந்து குண்டம் இறங்குவதற்கு இடம் பிடித்தனர். இதற்காக பக்கத்து மாவட்டத்திலிருந்து மாட்டு வண்டிகளில் சாரை, சாரையாக வந்தனர்.

நேற்று இரவு 9 மணி அளவில் குண்டம் பகுதியில் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் பற்றவைத்து குண்டத்தில் தீ மூட்டப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கு அனைவரும் புனித நீராடி வேப்பிலையை கையில் ஏந்தியபடி தாரை, தப்பட்டை உடன் குண்டம் இறங்க தயாராகினர். இன்று அதிகாலை 3.50 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் இருந்தது. முதலில் குண்டத்தில் பூபந்து உருட்டி விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி செந்தில் முதல் நபராக குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர்.

விழாவில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். இதேபோல் இந்து அறநிலையத்துறை கூடுதல் நிர்வாக ஆணையர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, பண்ணாரி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி., காளியப்பன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.

பொதுமக்கள் கைக் குழந்தையுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் திருநங்கைகள், பெண்களும் விரதமிருந்து பயபக்தியுடன் குண்டம் இறங்கினர். இதேபோல் கேரளா, கர்நாடகா மாநில பக்தர்களும் குண்டம் இறங்கினார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்கி பண்ணாரி யம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து மதியம் கால்நடைகளும் குண்டம் இறங்குகிறது. குண்டத்தை சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

குண்டம் விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங் களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

இதேபோல் பண்ணாரி யம்மனை தரிசனம் செய்வதற் காக போக்குவரத்து கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட்டன. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் இன்று இரவு வரை கனரக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தீயணைப்பு துறை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் தண்ணீர் பக்கெட்டுடன் தயார் நிலையில் இருந்தனர். பக்தர்கள் சிலர் குண்டம் இறங்கிய போது தட்டுத் தடுமாறி கீழே விழுந்த போது அங்கிருந்த போலீசார் தாங்கி பிடித்தனர். இதனால் பெருமளவில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் அமைதியான முறையில் குண்டம் விழா நடைபெற்றது.

இதேப்போல 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

குண்டம் விழாவை யொட்டி மூலவர் பண்ணாரி யம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வீணை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் உற்சவர் பண்ணாரி யம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment