பிரதோ‌ஷம்- பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று பங்குனி மாத பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரம் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பங்குனி மாத பிரதோ ஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பிரதோ‌ஷ பூஜைகளும் நடைபெறுகிறது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முன்னதாக கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்து அதற்கு பதிலாக பக்தர்களின் உடமைகள் கோவிலுக்கு எடுத்து செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் துணிப் பை வழங்கினார்.

தாணிப்பாறை அடி வாரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment