மகரம், கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! – 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை | vaara rasipalangal

மகரம்: கிரகநிலை: ராசியில் செவ், சுக், சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் – சுக ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.

குடும்பப் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு காரியத் தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வந்து குவியும். பலவழிகளிலும் வருமானம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும்.

**********************

கும்பம்: கிரகநிலை: ராசியில் குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் செவ், சுக், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் இழுபறியாக பாதியில் நின்ற காரியங்கள் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோபலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைப்பளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கலைத்துறையினர் எதிலும் அவசரம் காட்டாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

*****************

மீனம்: கிரகநிலை: ராசியில் சூரியன், புதன் – தன் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் செவ், சுக், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் வீண் செலவைக் குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து இருக்கும். எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை வணங்க குடும்பக் கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

***************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment