மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சென்னை :

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடந்து வருகிறது.

 

இந்நிலையில், பங்குனி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். 8.45 மணிக்கு திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சிவ சிவ கோஷம் முழங்க, பக்தர்கள் தேரை 4  மாட வீதிகளில் இழுத்துச் சென்றனர். பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment