மேஷம், ரிஷபம், மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! – 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை | vaara rasipalangal

மேஷம்: கிரகநிலை: ராசியில் ராகு – களத்திர ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் செவ், சுக், சனி – லாப ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துகளைக் கூறாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாகப் பேசுவது குடும்ப அமைதியைத் தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச்செல்வது போல் இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினர் மனதிற்கு திருப்தியளிக்கும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். அரசியல்வாதிகள் மாற்று கருத்துகளை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி வருவதால் கஷ்டங்கள் போகும். மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

****************

ரிஷபம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் செவ், சுக், சனி – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அயன சயன் போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் நீங்கள் பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கை யாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும்.

குறிக்கோளை அடைவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத்துறையினருக்கு அடுத்தவரைப் பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் குறையும். சிக்கலான பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: அம்மனை வணங்கி வர பிரச்சினைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

******************

மிதுனம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் செவ், சுக், சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாளை வணங்க மனத்தெளிவு உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும்.

*************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment