மேஷம், ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை | vaara rasipalangal

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு ஸ்தானத்தில் ராகு அஷ்டம ஸ்தானத்தில் கேது தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி லாபஸ்தானத்தில் புதன், குரு விரய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று ராகு பகவான் ராசிக்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி எற்படும். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வீண் மனக்கவலை, காரிய தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

**************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்):

கிரகநிலை:

ராசியில் ராகு சப்தம ஸ்தானத்தில் கேது பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி தொழில் ஸ்தானத்தில் புதன், குரு லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை அன்று கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் நேரடியாக பார்ப்பதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆடை போன்றவற்றை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் நீங்கும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை வெள்ளிக்கிழமை அன்று வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

**********************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment