யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்? || Rahu Ketu Peyarchi 2022 Rahu Ketu


ஒரு காலத்தில் நாடாளும் மன்னர்களின் பரம்பரைகளுக்கு மட்டும் பலன் பார்க்க பயன்படுத்தப்பட்ட ஜோதிட கலை தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது.

12.4.2022 முதல் 30.10.2023 வரை

நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 29ம் நாள் 12.4.2022 செவ்வாய்கிழமை பகல் 1.48 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் 2ம் பாதம் ரிஷப ராசியிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

அதே நேரத்தில் கேது பகவான் விசாக நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசியிலிருந்து விசாக நட்சத்திரம் 3ம் பாதம் துலா ராசிக்குள் பிரவேசிக்கிறார். அன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் மேஷ ராசியில் ராகு பகவானும் கேது பகவான் துலாம் ராசியிலும் சஞ்சரித்து பல்வேறு பலன்களை வழங்குவார்கள்.

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர். இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது. இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

ராகு இப்போது மேஷ ராசியில் செவ்வாய் வீட்டில் அமர்ந்து செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். கேது இனி துலாம் ராசியில் அமர்ந்து சுக்கிரனைப் போல செயல்படப்போகிறார்.

கிரக சஞ்சாரம்:ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

12.4.2022 முதல்14.6.2022 வரை கிருத்திகை நட்சத்திரம்.

15.6.2022 முதல் 20.2.2023 வரை பரணி நட்சத்திரம்.

21.2.2023 முதல் 30.10.2023 வரை அசுவினி நட்சத்திரம்.

கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.

12.4.2022 முதல் 17.10.2022 வரை விசாகம் நட்சத்திரம்

18.10.2022 முதல் 26.6.2023 வரை சுவாதி நட்சத்திரம்

27.6.2023 முதல் 30.10.2023 வரை சித்திரை நட்சத்திரம்

அதிர்ஷ்டமான பலன் பெறும் ராசிகள்:

ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம்

சுமாரான பலன் பெறும் ராசிகள்:

கடகம், மகரம்

பரிகார ராசிகள்:

மேஷம், கன்னி, துலாம், மீனம்

ஒரு காலத்தில் நாடாளும் மன்னர்களின் பரம்பரைகளுக்கு மட்டும் பலன் பார்க்க பயன்படுத்தப்பட்ட ஜோதிட கலை தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படுகிறது.

உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் எதிர்காலம் பற்றி அறியும் ஆவல் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். ஒருவரின் வாழ்நாள் பலனை நிர்ணயிப்பதில் வருட கிரகங்களான குரு, ராகு/கேது மற்றும் சனியின் கோட்சாரம் மிக முக்கியமானதாகும். அதே போல் ராகு/ கேதுக்கள் அசுப கிரகம், வினை ஊக்கிகள் என்பதால் இதன் பெயர்ச்சிகளைக் கண்டு பலரும் அஞ்சுகிறார்கள்.

மனிதன் தன் வாழ்நாளை மூன்று வகையான கர்ம வினைகளாக பெற்று அனுபவிக்கிறான். இதை பிறவிக் கடன் என்றும் கூறலாம். அதாவது அவை சஞ்சித கர்மம்,பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம்.

இதில் சஞ்சித கர்மம்என்பது தாய், தந்தையிடம் இருந்தும் நமது முன்னோர்களிடமிருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவ புண்ணியங்களின் சேர்க்கை . கரு உருவாகும் போதே உடன் உருவாகுவது .பிராப்த கர்மா என்பது சென்ற பிறவியின் வினைக்கு ஏற்ப ஆன்மா இந்த பிறவியில் அனுபவிக்கும் பிராப்த பலன்கள்.

பிராப்த பலன்களை அனுபவிக்கும்போது உருவாகும் புதிய கர்மாவால் வரும் பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும். ஆகாமிய கர்மா என்பது மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்க செய்யும் செயல்கள் மூலம் இந்த பிறவியில் சேர்க்கும் புதிய வினை.

இந்த மூன்று வகையான கர்மவினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்ம வினை தாக்தால் வருபவை.

இந்த மூன்று விதமான கர்ம வினைகளை அதிக ரிக்கச் செய்பவர் ராகு. இதிலிருந்து விடுபடும் மார்கத்தை காட்டுபவர் கேது. ராகுவின் செயல் களான ஆசை, பேராசை, கோபத்தை குறைத்து இயன்ற தானம் தர்மம் செய்து கேதுவின் வழி நடந்தால் பிறவிக்கடனில் இருந்து மீள முடியும்.

ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை கேதுவைப் போல் கெடுப்பவரும் இல்லை என்பது ஜோதிட பழமொழி. லௌகீக ஆர்வத்தை அதிகரித்து மாயையான வாழ்க்கையை கொடுப்பவர் ராகு. லௌகீக வாழ்க்கை நிரந்தரமற்றது. முக்தியே நிலையானது என்ற உண்மையை உணர வைப்பவர் கேது. ஆக ராகு கொடுக்கும் மாயையை கெடுத்து முக்திக்கு வழிகாட்டுபவர் கேது என்பது பொருள்.

இதை வேறு விதமாகச் சொன்னால் நேர்மை, நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது. எனவே மனசாட்சிக்கு பயந்து வாழப் பழக வேண்டும் என்பவர் கேது.

உலக இயக்கத்தையே கட்டிப்போடும் சக்தி கோட்சார ராகு/கேதுக்களுக்கு உண்டு. தசா புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவு.

ஜனன ஜாதக ரீதியான தசா புத்தி நடப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. உண்மையில் ராகு/கேதுவால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் திருக்கோளாறு பதிகம் படிக்கவும்.

இந்த ராகு/கேதுப் பெயர்ச்சி நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அனைத்து விதமான சுபமான பலன்களை வழங்க பிரபஞ்சித்திடம் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு பிரார்த்திக்கிறேன்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment