ராகு – கேது பெயர்ச்சி; அஸ்வினி நட்சத்திர அன்பர்களே! பண நெருக்கடி குறையும்; உதவி கிடைக்கும்; பதவி உயர்வு உண்டு; குழப்பம் தீரும்! | raaghu – kedhu peyarchi – aswini

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அஸ்வினி:

கிரகநிலை:

ராகு பகவான் உங்களுடைய மூன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்களுடைய பதினாறாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் மற்றவர்களுடன் நல்லுறவு ஏற்படும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும்.

நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினர் மனதில் குழப்பம் நீங்கும். அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வர காரியத் தடைகள் நீங்கும்.

மதிப்பெண்கள்: 70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

*****************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment