ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்; பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே! எதிர்பார்த்த உதவி; செலவு கூடும்; வேலையில் நற்பெயர்! | raaghu kethu peyarchi palangal

பூரட்டாதி: கிரகநிலை: ராகு பகவான் உங்களுடைய ஆறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்களுடைய பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியில் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும்.

முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளைச் செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும்.

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: முன்னோர்களை வணங்கி வருவதால் பணக்கஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

********


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment