ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்; பூரம் நட்சத்திர அன்பர்களே! திறமை கூடும்; பண வரவு உண்டு; குடும்பத்தில் சுபிட்சம்!  | raaghu kethu peyarchi palangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்களுடைய இருபத்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்களுடைய ஆறாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மதிப்பெண்கள்: 73% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

*****


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment