ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்; மகம் நட்சத்திர அன்பர்களே! திறமை கூடும்; மனக்கவலை; வேலையில் சிறப்பு; எதிலும் நன்மை!  | raaghu kethu peyrchi palangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்களுடைய இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்களுடைய ஏழாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நலம் தரும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

*****


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment