ராகு – கேது பெயர்ச்சி; புனர்பூசம் நட்சத்திர அன்பர்களே! மன உறுதி; தடை நீங்கும்; வேலையில் கவனம்; நிதானம் தேவை!  | raaghu kethu peyarchi palangal

செய்திப்பிரிவு

Published : 19 Mar 2022 02:46 am

Updated : 19 Mar 2022 14:47 pm

 

Published : 19 Mar 2022 02:46 AM
Last Updated : 19 Mar 2022 02:47 PM

raaghu-kethu-peyarchi-palangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

புனர்பூசம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்களுடைய இருபத்தி நான்காவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்களுடைய பத்தாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியில் மன உறுதி அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். பெண்களுக்கு சுபச் செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்பு கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீராமரை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மதிப்பெண்கள்: 76% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

********


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

தவறவிடாதீர்!

Source link

Leave a Comment