ராகு – கேது பெயர்ச்சி; மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே! வீண் செலவு; பண வரவு; கடன் வசதி; புதிய பதவி!  | raaghu kedhu peyarchi palangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிருகசீரிஷம்:

கிரகநிலை:

ராகு பகவான் உங்களுடைய இருபத்தி ஆறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்களுடைய பன்னிரெண்டாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாகப் பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும்.

புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும். மாணவர்கள் நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: பைரவரை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.

மதிப்பெண்கள்: 82% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**************************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment