ராகு – கேது பெயர்ச்சி; ரோகிணி நட்சத்திர அன்பர்களே! பண வரவு; ஆரோக்கியம் கூடும்; பிரச்சினைகள் தீரும்; உதவி கிடைக்கும்!  | raaghu kedhu peyarchi palangal

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோகிணி:

கிரகநிலை:

ராகு பகவான் உங்களுடைய இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

கேது பகவான் உங்களுடைய பதிமூன்றாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும்.

தேவையான பண உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும்.

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாகப் பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். கலைத்துறையினர் விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

பரிகாரம்: கிருஷ்ணரை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

மதிப்பெண்கள்: 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

******************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Source link

Leave a Comment