வாழ்வில் உண்டாகும் எத்தகைய கஷ்டங்களை தீர்க்கும் கோவில்


வாழ்வில் உண்டாகும் எத்தகைய கஷ்டங்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் அவை உடனே நீங்கும் என்பதும் அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஓவர் மலை கோயிலாக திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் இருக்கிறது. இக்கோயின் இறைவன் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி எறும்பீஸ்வரர் என்றும், அம்பாள் நறுங்குழல் நாயகி, சவுந்தர நாயகி ஆகிய பெயர்களில் வணங்கப்படுகிறார்கள்.

கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு இரண்டு காசி விஸ்வநாதர் சந்நிதிக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனி சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கரம் இருக்கிறது. ஸ்வாமியையும் இச்சக்கரத்தையும் சேர்த்து வணங்குபவர்களுக்கு எத்தகைய தோஷங்களும் தீரும் என்பது திடமான நம்பிக்கையாகும். இக்கோயிலில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், குமார தீர்த்தம், மது தீர்த்தம் என நன்கு தீர்த்தங்கள் உள்ளன.

உடல் மற்றும் மனதளவில் மிகுந்த சோம்பல் திறன் கொண்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கினால் அந்த சோம்பல் குணங்கள் முற்றிலும் நீங்கி, ஊக்கம் மற்றும் சுறுசுறுப்போடு உழைக்கும் குணம் உண்டாகும். மேலும் வாழ்வில் உண்டாகும் எத்தகைய கஷ்டங்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் அவை உடனே நீங்கும் என்பதும் அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும்.

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் திருவெறும்பூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல திருச்சி மாநகரத்திலிருந்து பேருந்து மற்றும் வாகன வசதிகள் அதிகம் உள்ளன.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment