aries weekly horoscope: வார ராசிபலன்: மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் வார பலன் மார்ச் 14 முதல் 20 வரை – weekly horoscope from march 14 to 20 march 2022 mesham rishabam mithunam kadagam rasi may get more respect

இந்த வாரம் கிரக நிலவரம்:
ரிஷபத்தில் ராகு, கடகத்தில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி,செவ்வாய், சுக்கிரன், கும்பத்தில் புதன், சூரியன், குரு.
மார்ச் 15ம் தேதி சூரியன் மீன ராசிக்கு பெயர்வார்.
மார்ச் 17ம் தேதி புதன் மீன ராசிக்கு பெயர்வார்.
இந்த வாரத்தில் பங்குனி உத்திரம், ஹோலிபோன்ற விசேஷ நாட்கள் வருகின்றன. 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

வார ராசிபலன்: தனுசு மகரம் கும்பம் மீனம் வார பலன் மார்ச் 14 முதல் 20 வரை
மேஷம் வார ராசிபலன்: பாராட்டு கிடைக்கும்
மேஷ ராசியினர் இந்த வாரம் முடிவுகளை எடுக்க தாமதிக்கமாட்டீர்கள். உங்களின் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். கல்லூரி வளாக (கேம்பஸ்) நேர்முக தேர்வில் பெரிய நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்கலாம்.

குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது அவசியம். சிறிய விஷயங்களுக்கு மனைவியுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் வார ராசிபலன்: சமூக மதிப்பு அதிகரிக்கும்
ரிஷப ராசியினருக்கு நீண்ட நாட்களாகத் தொந்தரவு கொடுத்துவந்த பிரச்சினைகள் தீரும். கனவுகள் நனவாகும். இந்த வாரம் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். தொழில் ரீதியான செயல்பாடு சிறக்கும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். நிலையான வருமானம் எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் வார ராசிபலன்: வரவேண்டிய பணம் வந்து சேரும்
உங்களின் பெருந்தன்மை அதிகரிக்கும். எதிரிகள் பலம் இழப்பார்கள். நீங்கள் நினைத்த இலக்கை அடைய சிறப்பாக செயல்படுவீர்கள். வீழ்த்த முடியாது, நிறைவேறாது என நினைத்த விஷயங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக வர வேண்டிய நிலுவையில் இருக்கும் பணம் வந்து சேரும். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை மாணவர்கள் பெறுவீர்கள். பேச்சு, செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1

மிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 : உடல் நலனில் கவனம், திருமணம் கைகூடும்
கடகம் வார ராசிபலன்: அவசரம் வேலையைக் கெடுக்கும்
இந்த வாரம் நீங்கள் உங்கள் வேலைகளை சற்று பொறுமையோடும், நிதானத்தோடு செய்யவும். ‘அவசரத்தில் அண்டாவில் கூட கை போகாது’ என்ற பொன்மொழிக்கேற்றவாறு, எளிய வேலைகளைக் கூட உங்களின் அவசரத்தால் தாமதமாகும் என்பதால் நிதானம் தேவை.

பங்குனி மாதத்தில், இந்த ராசிகளுக்கு பண வரவு குறையும், பிரச்னைகள் அதிகரிக்கும்… கவனம் தேவை

உங்களை பண ரீதியாக ஏமாற்ற வாய்ப்புள்ளது. அதனால் பணபரிவர்த்தனைகயில் கவனம் தேவை. வேலை, தொழிலில் உங்களின் செயல்பாடு சில அதிருப்தியைத் தரலாம். சில சமயங்களில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் கேள்விக்குறியாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 8

Source link

Leave a Comment