budhan peyarchi in meenam: மீன ராசியில் புதன் பெயர்ச்சி: புதாத்திய யோகம் எப்படிப்பட்ட பலனைப் பெறும் ராசிகள் – mercury transit in pisces benefits : budhaditya yoga benefits for mesham to thulam

மீன ராசியில் மார்ச் 24ம் தேதி புதனின் பெயர்ச்சி நிகழ்கிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை மீனத்தில் இருப்பார். ஏற்கனவே அங்கு சூரியன் சஞ்சரிக்கக்கூடிய நிலையில், தற்போது புதன் பகவான் அவருடன் சேர்ந்து புதாத்தியா யோகம் ஏற்பட உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், ஆரோக்கியம், தொழில் ரீதியாக சில முன்னேற்றமும், சிலருக்கு பிராச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் புதன் பகவானின் சஞ்சாரம் நிகழ்வதால், கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் கவனம் தேவை, நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு பணப்பரிவர்த்தனையும் கவனமும், சுதாரிப்புடன் செய்யவும்.

இந்த காலத்தில் நீங்கள் பல சவால்களைச் சந்திக்க நேரிடும். ஆடம்பர செலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பரிகாரமாக, தினமும் சூரிய உதயத்தில் காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு 11ம் வீடான வருவாய், லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் உங்களின் முயற்சிக்கும், திறமைக்கும் லாபம் தரக்கூடிய அமைப்புள்ளது. ஊடகம், திரைத்துறை, வணிகம் செய்பவர்கள், பணிபுரிபவர்களுக்கு தங்கள் பணிகளில் பாராட்டு, முன்னேற்றத்தைப் பெறலாம்.

இருப்பினும் சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பங்கு சந்தை மற்றும் முதலீடுகளில் லாபம் பெறலாம். பயணங்களும் நிகழலாம். தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடங்க சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் அழுத்தம் இருக்கும், இருப்பினும், கடின உழைப்பு எதிர்காலத்தில் பலனைத் தரும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்கான ஒரு வரி பலன்கள்
மிதுன ராசி
புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்கு 10ம் வீடான கர்மா, தொழில் ஸ்தானத்தில் புதன் இருப்பதால் உங்களின் தொழில், வேலை சார்ந்த சிந்தனை மேம்படும். சரியான வழியில் முயற்சி செய்ய அற்புத பலனைப் பெற்றிட முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பிரச்னை வரலாம். பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் பிணக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அனுசரித்துச் செல்லவும். உங்களின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்களை தீட்டலாம்.
பரிகாரம் : புதன் கிழமைகளில் ’ஓம் க்லீம் ஐம் சௌம்’ என்ற புதன் பீஜ மந்திரத்தை உச்சரிக்கவும்

மிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 : உடல் நலனில் கவனம், திருமணம் கைகூடும்

கடகம்
கடக ராசிக்கு 9ம் வீடான தந்தை, பாக்கிய ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களுக்க்கு பல்வேறு வகையில் அதிர்ஷ்டங்கள் அடிக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
பணியிட மாற்றத்தை விரும்பும் உத்தியோகஸ்தர்களுக்கு விருப்பம் நிறைவேறும். ஏதேனும் ஒருவகையில் இடமாற்றம் பெற வாய்ப்புள்ளது.

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் : நிதி நிலை மேம்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை

வேலையில் முன்னேற்றமும், புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கல்வியில் கவனம் தேவை. குடும்பத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். பரிகாரம் : புதன்கிழமை தோறும் விநாயகருக்கு லட்டுகளை பிரசாதமாகப் படையுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு ஆயுள், வறுமை, சிந்திக்காமல் செயல்படுதல் போன்ற விஷயங்களைக் குறிக்கக்கூடிய 8ம் வீட்டில் புதனின் சஞ்சாரம் நிகழ்வதால் மூதாதையரின் சொத்து மற்றும் பொருளாதார ரீதியான சில நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் சில பெரிய நிதி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தொழில், வியாபாரத்தில் இந்த புதனின் அமைப்பு பெரியளவில் சாதகமாக இருக்காது என்பதால் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சில மாற்றங்கள் ஏற்படலாம். கடன் வாங்குவதோ, கொடுக்கவோ வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரமாகப் பசுவிற்கு அகத்திக் கீரை கொடுக்கவும்.

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் : முயற்சிகள் நற்பலன் கிடைக்கும்,ஆரோக்கியத்தில் கவனம்

கன்னி
கன்னி ராசி அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 7ம் வீடான மனைவி, துணை, தொழில் கூட்டாளி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
இதனால் திருமணம் மற்றும் பயணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான செய்தி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் புரிந்துணர்வுடனும், நிதானத்துடனும் நல்லிணக்கத்துடன் செயல்படுவீர்கள்.

கன்னி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கவனமாக இருந்தால் சாதிக்கலாம்

மனைவியுடன் சேர்ந்து, உங்கள் எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள், யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணத்தை சேமிக்க முயலவும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.. பரிகாரமாக, மரகதம் பதித்த வெள்ளி அல்லது தங்க மோதிரத்தில் வலது கையின் சிறிய விரலில் அணியவும்.

துலாம் ராசி
துலாம் ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் நிகழ்வதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகள் கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 – நிதி நெருக்கடியை சாமாளிக்க தயாராகுங்கள்…

வீடு, வெளியிடத்தில் சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் தனி கவனம் செலுத்தவும். உங்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது என்பதால் எந்த ஒரு செயலையும் சிறு தயக்கத்துடன் தொடங்குவீர்கள். பணியிடத்திலும் சில தடைகள் வரலாம். தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம்.

Source link

Leave a Comment