capricorn weekly horoscope: வார ராசிபலன் ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரை – தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி வாரபலன் – vara rasi palan for sagittarius capricorn aquarius pisces zodiac from 4th to 10th april 2022

2022 ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரையிலான இந்த வாரத்தில் செவ்வாய் ஏப்ரல் 7ம் தேதியும், புதன் ஏப்ரல் 8ம் தேதியும் பெயர்ச்சி ஆகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மற்ற கிரகங்களின் அமைப்பு 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலனைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

தனுசு வார ராசிபலன் : ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும்
கோயிலுக்குச் செல்லுதல், குல தெய்வ வழிபாடு என ஆன்மிக ரீதியான விஷயங்களில் குடும்பத்துடன் செல்ல ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நட்பு கிடைக்கும். திருமண உறவில் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும் வாரமாக இருக்கும்.

தனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள் – குரு, சனி பெயர்ச்சி தரும் அற்புத பலன்
உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் மிகவும் சாதகமான, ஆதரவான நிலை இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். வியாபாரிகள் பெரிய ஆர்டர்களைப் பெற வாய்ப்புகள் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5

சந்திராஷ்டம நாட்கள் : ஏப்ரல் 10 (சந்திராஷ்டம நாட்களில் கவனமாக எந்த ஒரு வேலையையும் செய்யவும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.)

வார ராசிபலன் ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரை – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசி வாரபலன்

மகரம் வார ராசிபலன்: பொறுமையை சரியாக பயன்படுத்தவும்
மகர ராசிக்கு உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு கடினமான சூழலையும் சமாளிக்கப் பொறுமையாக செயல்படுங்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான திட்டமிடலுடன் உங்கள் செயலை செய்ய சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய வாரமாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க திட்டமிட்டிருந்தால் அது நிறைவேற சாதகமான சூழல் இருக்கும். வெளிநாடு, வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் வார ராசிபலன்: பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்

கும்ப ராசிக்கு இந்த வாரம் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் மூலம் செல்வம் சேர வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்க வாய்ப்பு உள்ளன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மனைவி, குழந்தைகளின் செயல்கள் மன மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி (ஏப்ரல் 7) – யோக பாக்கியங்கள் அள்ளப்போகும் 5 ராசிகள்
திருமண சுப காரியங்கள் உண்டாகும். முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணங்கள் லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

வார ராசிபலன் ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரை – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசி வாரபலன்
மீனம் வார ராசிபலன்: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்

மீன ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய வாரம். பல், எலும்பு சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். மற்றவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

Source link

Leave a Comment