guru peyarchi 2022 briefs benefits: குரு பெயர்ச்சி 2022 – 12 ராசிக்கான சுருக்கமான பலன்கள் – அதிர்ஷ்ட பலன் யாருக்கு?

ஜோதிடத்தில் குரு முழு சுபர் என அழைக்கப்படுகின்றார். மற்ற கிரகங்கள் மோசமான இடத்தில் அமர்ந்திருந்தாலும், குரு நற்பலன்களைத் தரக்கூடிய அமைப்பில் இருந்தால் அவர் வாழ்வில் சிறப்பான இடத்தை பெறக்கூடியவராக இருப்பார்.சுப கிரகமான அதிசார குரு பெயர்ச்சி ஏப்ரல் 14ம் தேதி கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த பெயர்ச்சியால் ஏற்படும் பலன்கள் 12 ராசிகளுக்கு பார்ப்போம்.

குரு பெயர்ச்சி பலனை எப்படி பார்க்க வேண்டும்?

குரு நம் வாழ்வில் ஒன்றியவராக இருக்கிறார். அதனால் நாம் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள், கோயில் கும்பாபிஷேகம் என போது எந்த ஒரு முக்கிய நிகழ்வுக்கும் குருவின் அருள் நிறைந்த சுப நேரத்தை குறித்து அந்த நேரத்தில் அந்த சுப நிகழ்வை நடத்துவது வழக்கம்.

குரு பெயர்ச்சி பலனை எப்படி பார்க்க வேண்டும்?

ஒரு ராசிக்கு குரு எந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார், குரு பகவானுக்கு எந்த இடத்தில் உங்கள் ராசி உள்ளது என்பதைப் பொறுத்து உங்களுக்கான பலன்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் குரு பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கு கிடைக்கக்கூடிய பலன் மட்டுமே. மற்ற கிரகங்களின் அமைப்புகளும் சாதகமாக இருப்பின் கூடுதல் நற்பலன்களும், இல்லையெனில் சுமாரான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

இனி 12 ராசிகளுக்கான சுருக்கமான குரு பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம்

​மேஷம்:

குரு பகவான் மேஷ ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அமரக்கூடிய நிலை இருந்தாலும், நீங்கள் அற்புத பலனையே பெறுவீர்கள். விரய குரு எப்படி நற்பலன் தருவார் என்றால் உங்களின் விரயங்கள் சுப விரய செலவாக்குவார். அதாவது திருமணம், குழந்தைப் பேறு, வீடு, மனை என சொத்து வாங்குதல், பிள்ளைகளில் கல்விக்காகச் செலவிடுதல், ஏதேனும் முதலீடு செய்தல் போன்ற விஷயங்களுக்காக நீங்கள் செலவிடுவீர்கள்.

இந்த செலவு உங்களுக்கு மன மகிழ்ச்சியையும், பிற்காலத்தில் வருமானத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.

அதே போல குருவுக்கு 2ல் உங்கள் ராசி குடும்பம், தன ஸ்தானமாக அமைகிறது. உங்களின் விரயத்தின் மூலம் உங்களுக்கு தன வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

​ரிஷபம் :

ரிஷப ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தில் குரு அமர உள்ளார். உங்களுக்கு மூத்த சகோதரர் வகையில் நல்ல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். சுப ஸ்தானமாக இருப்பதால் நீங்கள் நினைப்பது எளிதாக நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிலும் வெற்றி கிடைக்கும். திருமணம் முயற்சிகள் சாதகமாகி வெற்றி கிடைக்கும்.

வியாபாரம், தொழில் தொடர்பான விஷயங்களால் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மற்ற கிரகங்கள் சாதகமற்ற சூழல் நிலவுவதால் தொழில், வேலை தொடர்பான விஷயங்களில் கவனமுடன் இருப்பது அவசியம்.

​மிதுனம்

மிதுன ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதுவரை தொழில், வேலை தொடர்பான விஷயங்களில் ஏற்பட்டு வந்த பிரச்னைகள் தீரும்.

தற்காலிக உத்தியோகஸ்தர்கள் பார்க்கக்கூடிய வேலை உறுதிப்படுத்தப்படும்.

நீங்கள் வேண்டாம் போதும், இந்த தொழில், வியாபாரம் விட்டு விடலாம் என நினைக்கக்கூடிய தொழில் அல்லது ஏற்கனவே விட்ட தொழில் எடுத்து செய்ய வாய்ப்புள்ளது.

தொழில் மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் அந்த தொழிலில் கஷ்டப்படக்கூடிய நிலை இருந்தாலும், அதன் பின்னர் நினைத்தது போல சிறப்பானதாக இருக்கும்.

மிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 : உடல் நலனில் கவனம், திருமணம் கைகூடும்

கடகம்

கடக ராசிக்கு 9ம் வீட்டில் குரு அமர்வதோடு, அவரின் 5ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது விஷேசமானது. உங்கள் வாழ்க்கை, தொழிலில் எப்பேர்ப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் 9ல் குரு இருப்பதால் எல்லா இன்னல்களிலிருந்தும் விடுபடக்கூடிய, தீர்வு காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் எந்த ஒரு வேலையையும் கவனமாக செய்வது நல்லது. உங்களைக் காப்பாற்றக்கூடிய குருவின் பார்வை விழுவது மகத்தானது.

​சிம்மம்

சிம்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்தில் குருவின் சஞ்சாரம் நிகழ்வது சாதகமற்றதாகும். எந்த ஒரு விஷயமும் நல்ல முறையில் நடப்பது போல் தோன்றும் ஆனால் நினைத்தபடி நடக்காது. எல்லாமே இருந்தும் மனத்திருப்தி இல்லாத நிலையிலேயே இருப்பீர்கள். தன்னிடம் இருப்பதை விடுத்து மனம் வேறு எதையோ நாடக்கூடிய சூழல் இருக்கும்.

​கன்னி

கன்னி ராசிக்கு 7ம் வீடான வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டணி, பங்குதாரர்களைக் குறிப்பிடக்கூடிய ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நிகழ்கிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடந்தேறும்.

எந்த ஒரு தொழில், வியாபாரமாக இருந்தாலும் அதில் இருக்கும் பிரச்சினை தீர்வதற்கும், பணிச்சுமை குறைவதற்கும் உங்கள் பங்குதாரர், தொழில் கூட்டாளி உதவுவார்கள்.

குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் உங்களின் துணை மிகவும் சாதகமாகவும், எல்லா விதத்திலும் ஆதரவாக செயல்படுவார். மனைவி வகையில் நல்வழி பிறக்கும். அவர்கள் மூலம் சொத்து, அதிர்ஷ்டங்கள் கைகூடும்.

​துலாம்

துலாம் ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நிகழ்கிறது. உங்களைக் குறித்த மோசமான எண்ணம் பிறரிடம் இருந்தால் அது விலகும். அதே போல எதிரி அல்லது இவர் உதவ மாட்டார் என எண்ணிய உங்களுக்கு அவர் உதவக்கூடிய, நல்லது செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நோய் ஸ்தானம் என்பதால் ஆரோக்கிய பிரச்னை குறையக்கூடிய நிலை இருந்தாலும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளவும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.

​விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 5ம் இடமான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் குரு வருவதோடு, அது திரிகோண ஸ்தானமாக அமைவது மிகவும் விசேஷமானது.

நீங்கள் தொட்டது துலங்கும். எதை எடுத்தாலும் நல்ல வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. சமூகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவும், வெற்றியும் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு.

பிள்ளைகள் மூலம் அதிர்ஷ்டமும், நற்பலனும் கிடைக்கும். குழந்தைப் பேறு அதிர்ஷ்டம் உண்டு. சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

​தனுசு

தனுசு ராசிக்கு 4ம் வீடான சுக, தாயார் ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் செய்வது நன்மையைத் தரும். தனக்கு எந்த ஒரு வீடு, மனை சொத்து என எதுவும் இல்லை என நினைக்கும் தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் விரும்பியதை விட அதிகமாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்தைக் குறித்த புலம்பல் குறையும்.

தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். நிலம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்குச் சாதகமானதாகவும், லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

தனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள் – குரு, சனி பெயர்ச்சி தரும் அற்புத பலன்

​மகரம்

குரு மகர ராசிக்கு 3ம் வீடான தைரிய ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். உங்களின் எந்த ஒரு பயணமும் சாதகமானதாக அமையும். நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் பிறருக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப காரியங்கள் சிறப்பாக நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சகோதர / சகோதரிகள் ஆதரவாகவும், அவர்களுக்கான சுப காரியங்கள் நடக்கும்.

​கும்பம்

கும்ப ராசிக்கு 2ம் வீடான குடும்பம், தன ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் நிகழ உள்ளது. தனவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு முக்கியமான நபர்களை சந்திக்க வாய்ப்புகள் அமையும்.

உங்களின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

பெற்றோர், வயதானவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்கான ஒரு வரி பலன்கள்

​மீனம்

மீன ராசியிலேயே குரு பகவானின் சஞ்சாரம் நிகழ்கிறது. குரு அமர்ந்திருக்கும் ராசியை விட, அவரின் பார்வை பலனே அதிகம் என்பார்கள். இருப்பினும் ஜென்ம ராசியில் குரு இருந்தால் உங்களை நீங்கள் யார் என்பதை உணர்த்துபவராக இருக்கும். உங்கள் திறமையை வெளி கொண்டு வரும். உங்கள் மதிப்பை அதிகரிக்கும்.

ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வீட்டு பொறுப்பாக இருந்தாலும், நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் என எதுவாக இருந்தாலும் நீங்களே புதிய பொறுப்புகளை எடுத்துச் செய்வீர்கள். சிறப்பான வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகள், முக்கிய நபர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

Source link

Leave a Comment