intha vara rasi palan: வார ராசிபலன் ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரை – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசி வாரபலன் – weekly horoscope for aries, taurus, gemini, cancer zodiac sign based on change in planetary position

2022 ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரையிலான இந்த வாரத்தில் செவ்வாய் ஏப்ரல் 7ம் தேதியும், புதன் ஏப்ரல் 8ம் தேதியும் பெயர்ச்சி ஆகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மற்ற கிரகங்களின் அமைப்பு 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலனைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் வார ராசிபலன்: நிதி மகிழ்ச்சி கிடைக்கும்
மேஷ ராசியினருக்கு இந்த வாரம் லாபம் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். தொழில், வேலை தொடர்பான பயணங்கள் அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அதன் மூலம் சாதகமான முடிவுகளும், லாபங்களும் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகளுக்கு நல்ல மதிப்பும், நிதி நிலை ரீதியாக மகிழ்ச்சியும் பெறுவீர்கள்.

எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை எளிதாக முடிப்பீர்கள். திருமண வாழ்க்கை திருப்தியானதாக, மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். போட்டித் தேர்வுக்குத் தயாராகக்கூடிய மாணவர்கள் வெற்றி பெற அதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2


ரிஷபம் வார ராசிபலன்: நல்ல செய்திகள் வந்து சேரும்
ரிஷப ராசியினருக்கு குடும்பத்தில் மன மகிழ்ச்சியும், பிள்ளைகளால் நன்மையும் கிடைக்கக்கூடிய வாரம். திடீர் பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, கெளரவம் உயரும்.

பணியிடத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையை முடிக்க முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வுக்காக வேறு வேலைகளைத் தேடலாம். புதிய வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் வார ராசிபலன்: மகிழ்ச்சியையும் ஆதரவையும் பெறுவீர்கள்
மிதுன ராசியினர் இந்த வாரம் உங்கள் குடும்பம், பணியிடம் என எல்லா வகையிலும் மகிழ்ச்சியும், ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி அடைவீர்கள். வேலையில் மிகவும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். விளையாட்டு, போட்டித் தேர்வு போன்ற விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

மிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 : உடல் நலனில் கவனம், திருமணம் கைகூடும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நண்பர் அல்லது உறவினரை சந்திக்கக்கூடும். காதல் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். சில தடைகளுக்குப் பிறகு, அன்பு அதிகரிக்கும், பெற்றோரின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2

கடகம் வார ராசிபலன்: பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
இல்லற வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆன்மிகம் சார்ந்த சடங்குகள் போன்ற விஷயங்கள் உங்கள் வீட்டில் நடக்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியம் நடக்கும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் செய்ய சில வாய்ப்புகள் அமையும்.

விருப்பமான இடத்திற்குப் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. முக்கிய விஷயங்களை நண்பர்களுடன் விவாதிப்பீர்கள். குடும்ப சிக்கலைத் தீர்க்க வழி கிடைக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். புதிய தகவல்களையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 8

Source link

Leave a Comment