kanni weekly horoscope: வார ராசிபலன் ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரை – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசி வாரபலன் – weekly horoscope 4th to 10th april 2022 for leo virgo libra scorpio zodiac sign based on mars and mercury planet change

2022 ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரையிலான இந்த வாரத்தில் செவ்வாய் ஏப்ரல் 7ம் தேதியும், புதன் ஏப்ரல் 8ம் தேதியும் பெயர்ச்சி ஆகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மற்ற கிரகங்களின் அமைப்பு 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலனைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

சிம்மம் வார ராசிபலன்: எதிரிகளை தோற்கடிப்பீர்கள்
சிம்ம ராசிக்கு திடீர் பண வரவு ஏற்படுவதற்கான சூழல் அமையும். உங்கள் நண்பர்கள் மற்றும் பணியிடத்தில் சக ஊழியர்களிடமிருந்து சாதகமான ஆதரவுகளைப் பெறுவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

சிம்ம ராசி குரு பெயர்ச்சி 2022 பலன்கள்

வியாபாரம், தொழில் போன்ற விஷயங்களில் எதிரிகளை சிறப்பாக கையாண்டு அவர்களை வெற்றி கொள்வீர்கள். சுபகாரிய விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். சுற்றுலா அல்லது விசேஷம் என குடும்பத்துடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும். உத்தியோகத்தில் மேன்மை அடைவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கத்திற்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் தமிழ் சுபகிருது புத்தாண்டு ராசி பலன் 2022 – 2023 – சனி பக்கபலமாக இருப்பார்

கன்னி வார ராசிபலன்: அதிர்ஷ்ட பலன் கிடைக்கும்
கன்னி ராசிக்கு எதிலும் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலைகள் இருக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

குழந்தையின் முன்னேற்றம் தொடர்பான விஷயங்களைச் சிந்திப்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும். சில விஷயங்களால் மனச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 7
சந்திராஷ்டம நாட்கள் : ஏப்ரல் 4

கன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022 : ஆரோக்கியம், வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை
துலாம் வார ராசிபலன்: பெரியவர்களுடன் ஆலோசனை கிடைக்கும்
துலாம் ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய வாரம். திருமண வாழ்க்கையில் இனிமையான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. வேலை அல்லது ஆன்மிக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்களின் புத்திசாலித்தனமான செயல்பாடும், செல்வாக்குமிக்க ஆளுமை காரணமாக உங்களின் மேலதிகாரிகளை மகிழ்விக்க முடியும்.

தாயுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் விவாதம் வேண்டாம். அவர்களின் ஆலோசனை மிகச்சிறப்பான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். அண்டை வீட்டாருடனான உறவு மேம்படும். காதல் வாழ்க்கையில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 3
சந்திராஷ்டம நாட்கள் : ஏப்ரல் 4, 5, 6 (சந்திராஷ்டம நாட்களில் கவனமாக எந்த ஒரு வேலையையும் செய்யவும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.)

வார ராசிபலன் ஏப்ரல் 4 முதல் 10ம் தேதி வரை – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசி வாரபலன்
விருச்சிகம் வார ராசிபலன்: மகிழ்ச்சிகரமான செய்திகளைப் பெறுவீர்கள்
விருச்சிக ராசிக்கு இனிமையான செய்திகள் கிடைப்பதற்கான வாரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வெற்றிகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் வெற்றியும், புகழும் உண்டாகும்.

குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்படும். பிறருக்கு உதவுதல் மற்றும் பொதுநலப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வம்பு, வழக்கில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும்.நட்பு வழியில் பிரச்னைகள் வரும் என்பதால் யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 21
சந்திராஷ்டம நாட்கள் : ஏப்ரல் 6, 7, 8, 9 (சந்திராஷ்டம நாட்களில் கவனமாக எந்த ஒரு வேலையையும் செய்யவும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.)

Source link

Leave a Comment