Kumbam Guru Peyarchi Palan: கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2022 : ஆரோக்கியம் அதிகரிக்கும், நிதி நிலை உயரும் – aquarius jupiter retrograde 2022 : guru in dhana sthana effects in tamil

ஏப்ரல் 12ம் தேதி ராகு – கேது பெயர்ச்சி நடக்க உள்ள நிலையில், குரு பெயர்ச்சி நிகழ்வு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நடக்க உள்ளது. கும்பத்தில் இருக்கும் குரு அதிசாரமாக மீன ராசிக்கு செல்ல உள்ளார். மீன ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும். குருவின் பார்வை பலன் எப்படிப்பட்ட பலன் கொடுக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2022 ஏப்ரல் 12 முதல் 2023 ஏப்ரல் 22ம் தேதி வரை மீனத்தில் இருப்பார் அதன் பின்னர் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இந்த இடைப்பட்ட காலத்தில் கும்ப ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

குரு அமையும் இடத்தால் கிடைக்கும் அதிர்ஷ்டம் :
கும்ப ராசிக்கு 2ம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி ஆக உள்ளது கும்ப ராசிக்கு மிகவும் சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. 2ல் குரு இருந்தால் பலம் அதிகம் அதிலும், அவர் சொந்த வீட்டில் சஞ்சரிப்பது கூடுதல் சிறப்பு.

கும்ப ராசிக்கு 2 மற்றும் 11ம் வீட்டு அதிபதியாக இருக்கும் குரு 2ம் இடத்தில் இருப்பதோடு, கும்பத்திற்கு 6, 8, 10ம் வீட்டின் மீது அவரின் அற்புத பார்வை விழும்.

குருவின் 5ம் பார்வை பலன் :
குரு பகவானின் 5ம் பார்வை ராசிக்கு 6ம் வீடான ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறார். அதனால் உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லக்கூடிய மன தைரியம் உண்டாகும். உங்களின் நிதி நிலை உயரும் என்பதால் உங்களின் கடன் பிரச்சினைகளைத் தீரக்கூடிய அற்புத வாய்ப்பு உண்டாகும். பயம் நீங்கும். உங்களின் சிந்தனை அதிகரிக்கும்.

குருவின் 9ம் பார்வை பலன்;
உங்கள் ராசிக்கு 10ம் வீடான தொழில் ஸ்தானத்தின் ன் மீது குருவின் சிறப்பான 9ம் பார்வை விழுகிறது. நீங்கள் உங்களின் தொழில், வியாபாரத்தில் ஏதேனும் மாற்றங்களை எதிர்நோக்கி இருந்தால் அதில் சிறப்பான மாற்றங்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொடரப்பான தொழில் வாய்ப்புகள், தொழில் தொடர்புகள் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் உத்தியோகத்தில் மேன்மை தரக்கூடியதாக இருக்கும். புதிய வேலை முயற்சிகள் சாதகமாக அமையும்.

குருவின் 7ம் பார்வை பலன்;
திருமணத் தடைகள் நீங்கி, நல்ல வரன் கைகூடும். உங்களுக்கு சௌபாக்கியங்கள் கூடும். தந்தையின் உடல் நலம் மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மீனம் குரு அதிசார பெயர்ச்சி பலன்கள் 2022 – வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்

குருவின் வக்ர கதி காலம் தரும் பலன்:
குரு பகவான் வக்ர கதியாக 2022 ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை செல்வார்.
அப்போது அவர் உங்களின் ராசி அதிபதியான சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் குரு நற்பலன்களையே தருவார். உங்களின் தாயைப் போன்றவராகச் செயல்படக்கூடிய சனி, நீங்கள் எந்தளவுக்குச் சிறப்பாக செயல்படுகிறீர்களோ அதற்கேற்றார் போல நிச்சயம் சிறப்பான பலன்களைத் தரக்கூடியவராக இருப்பார். சிரமம் இல்லாமல் உங்களுக்கு நற்பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் உங்களின் முயற்சிக்குக் கூடுதல் பலன் கிடைக்கும். மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Source link

Leave a Comment