ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி மார்ச் 21 நடந்தது. திருக்கணிதபடி பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ம் தேதி நடக்கும் என கூறப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சி நடக்கும்.
இந்நிலையில் மற்றொரு முக்கிய கிரகமும், சுப கிரகமான அதிசார குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. தற்போது கும்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் ஏப்ரல் 14ம் தேதி குரு அதிசார பெயர்ச்சியாக கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
நன்மைகள் :
குரு மீன ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் மகர ராசிக்கு பெரியளவில் நற்பலன்களே நடக்கும். அதிலும் குறிப்பாக உங்களின் முயற்சிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம் என்பதால், வேலை, தொழில், குடும்ப விஷயம் என எதுவாக இருந்தாலும் அதில் முயற்சி செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். குரு என்றும் உங்களுக்கு துணை நிற்பார்.
வழிபாடு :
குருவின் அருளைப் பெறுவது நல்லது.
அந்த வகையில் குரு ஸ்தலமாக இருக்கும் திருச்செந்தூர் சென்று வருவதும், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.
தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சுவாமியான முருகப்பெருமான் வழிபட்டு அருள் பெற்றிடுங்கள்.