makaram rahu ketu peyarchi palan: மகர ராசி ராகு கேது பெயர்ச்சி 2022-2023 : ஜென்ம சனி விலகும், மன நிம்மதி கிடைக்கும்

  • 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு – கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
  • மகரம் ராசிக்கு ராகு 4ம் இடத்திலும், கேது 10ம் இடத்திலும் வருகின்றனர்.
  • உங்களின் எண்ணங்கள், செயல்பாடுகளில் புதுமையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி எப்போது?

எந்த ஒரு சூழ்நிலையையும் தன் தன்னம்பிக்கையுடன் தளராமல் எதிர்கொள்ளக்கூடிய மகர ராசி நேயர்களுக்கு

ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பங்குனி 7 (மார்ச் 21) தேதி மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நிகழ்வின் போது ராகு ரிஷபத்தில் இருக்கும் கார்த்திகை 2ம் பாதத்திலிருந்து மேஷ ராசியில் இருக்கும் கார்த்திகை 1ம் பாதத்திற்கும், கேது விருச்சிகத்தில் இருக்கும் விசாகம் 4ம் பாதத்திலிருந்து, துலாம் ராசி விசாக நட்சத்திரம் 3ம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 அன்று மதியம் 1.38 மணியளவில் நிகழ்கிறது.

ராகு கேது பெயர்ச்சியால் சிக்கி கெடுபலன் பெறப்போகும் ராசிகள்

ராகு கேது தரும் நன்மை, தீமைகள்

மகர ராசிக்கு 4ம் இடமான தாயார்,சுக, வாகன ஸ்தானத்தில் ராகு பெயர்ச்சி ஆகிறார்.

நன்மைகள் :

உங்களின் எண்ணங்கள், செயல்பாடுகளில் புதுமையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

கவனம் :

தொழில், உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுவதும், முடிவெடுப்பதன் மூலம் மேன்மை உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சியால் சிக்கி கெடுபலன் பெறப்போகும் ராசிகள்

அதே போல 4ம் இடத்தில் ராகு இருப்பதால் வாகனம் சார்ந்த ஓட்டுநர், போக்குவரத்து காவலர் உள்ளிட்டோர்களுக்குக் கடன் தொல்லையிலிருந்து விடுபடக்கூடிய நல்வாய்ப்புகள் அமையும்.

வெளியூர், வெளிநாட்டில் உத்தியோகம் செய்யக்கூடியவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். உள்ளூரில் பணியாற்றுபவர்களை விட வெளியூரில் பணிசெய்பவர்களுக்கு அபாக்கியம் குறைவாக இருக்கும்.

​தொழில்;

கஷ்டப்பட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு அவர்களின் முயற்சிக்கு ஏற்ப கண்டிப்பாக நல்ல பாக்கியங்கள், லாபம், வருமானம் கிடைக்கும்.இருப்பினும் கேதுவின் அமைப்பால் நீங்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் உங்களுக்கு ஒரு சில தடைகளைக் கொடுத்து பின்னர் தான் ஏற்றங்களைத் தருவார்.

நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கி, உங்கள் வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.

உறவினர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

30 வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு வரும் சனி : 5 ராசிகளுக்கு ராஜ யோக பலன்கள்

நிதி நிலை

உங்களுக்கு வரவேண்டிய தன வரவில் இருந்த இழுபறிகள் நீங்கி, பணம் வந்து சேரும். எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம், பண வசதி கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் சாதகமான நிலை உண்டாகும்.

​உத்தியோகம் :

உத்தியோகம் :

உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான சோர்வு அதிகரிக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இருந்த எதிரிகள் நீங்கி நிம்மதி ஏற்படும்.

அதே போல மகர ராசிக்கு 10ம் இடமான ஜீவன ஸ்தானம் என்றழைக்கப்படக்கூடிய கர்ம, தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் பெயர்ச்சி நடக்கிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் என்ன தான் திட்டமிட்டு செய்தாலும் உங்களின் வேலையில் இழுபறி, பணிச்சுமை ஏற்படத்தான் செய்யும்.

குரு, ராகு – கேது, சனி பெயர்ச்சிகள் – ஏப்ரல் மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகள்

உங்களின் திறமைக்கு சரியான மரியாதையோ, பதவிகளோ கிடைக்காமல் தள்ளிப்போகும். அதே சமயம் உங்களுடன் பணியாற்றுபவர்களுக்கு, உங்களை விட குறைவாக வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, வேலை சார்ந்த சலுகைகள் கிடைக்கும்.

ஆரோக்கியம்; பரிகாரம்

ஆரோக்கியம்

ஆரோக்கியம் அதிகரிக்கும். புதுவித ஆசை, ஆர்வங்கள் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை.

வண்டி வாகனம், சுக போகங்கள் ஏற்படும். என்றாலும் உங்கள் தாயாருக்கு ஆரோக்கிய பிரச்சினைகளும், அதன் மூலம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு :

மனதில் சில குழப்பங்களும், புதிய சிந்தனைகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு :

கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொழுது போக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்தவும்.

வழிபாடு :

குல தெய்வ வழிபாடு செய்யவும்.

வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மர் வழிபடு செய்து வர, தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.

Source link

Leave a Comment