meenam vara rasi palan: வார ராசிபலன்: தனுசு மகரம் கும்பம் மீனம் வார பலன் மார்ச் 14 முதல் 20 வரை – check weekly horoscope from 2022 march 14 to 20th predictions for sagittarius capricorn aquarius pisces signs

இந்த வாரம் கிரக நிலவரம்:
ரிஷபத்தில் ராகு, கடகத்தில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி,செவ்வாய், சுக்கிரன், கும்பத்தில் புதன், சூரியன், குரு.
மார்ச் 15ம் தேதி சூரியன் மீன ராசிக்கு பெயர்வார்.
மார்ச் 17ம் தேதி புதன் மீன ராசிக்கு பெயர்வார்.
இந்த வாரத்தில் பங்குனி உத்திரம், ஹோலிபோன்ற விசேஷ நாட்கள் வருகின்றன. 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

வார ராசிபலன்: மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் வார பலன் மார்ச் 14 முதல் 20 வரை
தனுசு வார ராசிபலன்: அதிகமாகச் செலவு செய்வதைத் தவிர்க்கவும்

தனுசு ராசியினருக்கு நல்ல வாரமாக அமையும் என்றாலும், உங்களின் செலவு கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களில் ஈடுபடவோ, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்.

உங்கள் செயல்பாடுகளில் குழப்பமானதாக இருக்க வாய்ப்புள்ளது. கடைவீதியில் நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க நினைத்து நினைத்ததை விட அதிகம் செலவு செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிறிய விரிசல் ஏற்படும். உங்களை புறக்கணித்தவர்கள் தேடி வருவர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள் : மார்ச் 14 முதல் 16 வரை

பங்குனி மாதம் 2022 ராசிபலன் : இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது!

மகரம் வார ராசிபலன்: கோபத்தைக் கட்டுப்படுத்தவும்
மகர ராசியினர் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடிய வாரமாக இருக்கும் என்றாலும் பொறுமை அவசியம். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் உங்களுக்கென மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரைவாக நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம் நாட்கள் : மார்ச் 16 முதல் 20 வரை

பங்குனி மாதம் 2022 ராசிபலன் : தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மாதபலன்
கும்பம் வார ராசிபலன்: வேலை வெற்றியடையும்
கும்ப ராசியினர் உற்சகமாக செயல்படுவீர்கள். உங்கள் தொழில் மேம்பாட்டுக்கான முயற்சியை எடுப்பீர்கள். உடல் நலம் மேம்படும். நீங்கள் விரும்பக்கூடிய நபரிடம் உங்கள் விருப்பத்தை தெரிவிக்க முயல்வீர்கள். ஒரு கடினமான வேலையை சிறப்பாக செய்து வெற்றி அடைவீர்கள்.

வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த செயலிலும் கவனமாக செயல்படவும். புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 7
கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம நாட்கள் : மார்ச் 18 முதல் வரை

மீனம் வார ராசிபலன்: புதிய பொறுப்புகள் கிடைக்கும்
இந்த வாரம் நீங்கள் நினைத்தபடி உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களின் நோக்கம், லட்சியத்தை நோக்கி நகர்வீர்கள். வீட்டை ஒழுங்குபடுத்தச் சிறந்த நேரம். குடும்பத்தில், பணியிடத்தில் சில பொறுப்புகள் நீங்கள் பெறுவீர்கள். பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்க முடியாமல் விருப்பமில்லாமல் செயல்படுவீர்கள். கல்வியில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 16

Source link

Leave a Comment