mithunam rahu ketu peyarchi palan 2022: மிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 : உடல் நலனில் கவனம், திருமணம் கைகூடும் – gemini rahu ketu transit effects 2022 : mithunam rasi need to take care of your health

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய, கலகலப்பாக தன் சூழலை மாற்றிக் கொள்ளக்கூடிய மிதுன ராசி நேயர்களே.

ராகு – கேது பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாதம் 7ம் தேதி 3.02 மணிக்கு (மார்ச் 21) அன்று ரிஷப ராசியில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மேஷ ராசியில் இருக்கும் கார்த்திகை 1ம் பாதத்திற்கு ராகுவும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருக்கும் விசாகம் 4ம் பாதத்திலிருந்து, துலாம் ராசியில் இருக்கும் விசாக நட்சத்திர 3ம் பாதத்திற்கு மாற உள்ளார்.

அதோடு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு – கேது பெயர்ச்சி நிகழ்வதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ராகு கேது பெயர்ச்சியின் காரணமாக மிதுன ராசிக்கு ராகு 12ம் வீட்டிலிருந்து 11ம் இடத்திற்கும், கேது 5ம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

மாசி மாதம் பலன் – மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம் மாசி மாத 2022 ராசிபலன்
இந்த நிழல் கிரகங்களின் அமைப்பின் காரணமாக மிதுன ராசியினர் நன்மையும், கெடுபலனும் சேர்ந்த கலவையான பலன்களைப் பெறுவீர்கள்.

நிதி நிலை எப்படி இருக்கும் ?
உங்களின் நிதி நிலை ஏற்ற இறக்கங்களுடன் தான் இருக்கும். பல நேரங்களில் உங்களின் நிதிநிலை அதிகரிக்கக்கூடியதாக இருந்தாலும், கூடவே திடீர் செலவுகளும் உங்களைத் துரத்தும். ஆராய்ந்து செலவிடுவதும். வீண் செலவை கட்டுப்படுத்திச் சேமிப்பது அவசியம்.

மேஷத்தில் ராகு, துலாம் ராசியில் கேது பெயர்ச்சி : சிக்கி கஷ்டப்படப்போகும் ராசிகள்

ஆரோக்கியம் ;
எந்த ஒரு செயலிலும் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. துரித உணவுகளை எடுத்துக் கொள்வதும், தூக்கத்தைத் தவிர்ப்பதும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு :
பெண்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். உங்களின் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும் என்றாலும், குடும்பத்தில் கவனமாகவும், விட்டுக் கொடுத்துச் செல்வதும் அவசியம். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் தம்பதியிடையே அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கல்வி :
மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாடு சென்று கல்வி கற்க முயல்பவர்களுக்கு சாதகமானதா அமையும். உங்களின் திறமை, யுக்திகளால் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் :
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி சாதகமானதாக இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். உங்களின் செயல்பாடுகளால் பாராட்டுகள் கிடைக்கும் என்றாலும், உங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய பணி உயர்வு, சம்பள உயர்வு காலதாமதமாக கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகளுக்கும், ஈடுபாட்டிற்கும் ஏற்ற முன்னேற்றத்தை அடைய முடியும். தொழில் பங்குதாரர்கள், கூட்டாளிகளிடம் எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பிரச்சினைகள் இன்றி, தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.

பிரபலங்கள் :
திரைத்துறை, அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அடைய முடியும். உங்களிடம் இருந்த குறைகள் அல்லது தடைகளையே முன்னேற்ற படிகளாக மாற்றி முன்னேறுவீர்கள்.

கலைஞர்கள் தங்களின் துறைகளில் ஏதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் அமையும். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவான, சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் குரு அதிசார பெயர்ச்சி பலன்கள் 2022 – வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்

சாதகமான பலன்கள் :
இந்த ராகு – கேது பெயர்ச்சியின் மூலம் நீங்கள் பல வகையில் ஆதயங்களை அடைவீர்கள். எதிர்பாராத புதிய வாய்ப்பு, வசதிகள் தேடிவரும். அதன் மூலம் உங்களின் செல்வாக்கும், செல்வமும் உயரும்.

கவனமாக இருக்க வேண்டியவை :
வீடு, நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஆவணங்களை சரியாக படித்துப் பார்க்கவும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அவசரம் வேண்டாம், பொறுமையுடன் செயல்படவும்.

வழிபாடு :
உங்கள் பணிகளில் ஏற்படும் தடைகள் நீங்க வினை தீர்க்கும் விநாயகரை வணங்கி தொடங்கவும். உடல் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்படைவீர்கள்.

*குறிப்பு :
இங்கு கூறப்பட்டுள்ள பலன்கள் பொதுவான பலன்களே… மிக துல்லிய பலன்கள் உங்களின் தசா புத்தியைப் பொறுத்தே அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Source link

Leave a Comment