|
பெயர் பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண் இருவரின் பெயர்களை வைத்து திருமணத்திற்கு முன்பே அவர்களின் திருமண வாழ்க்கை நிலையை கண்டறிவது ஆகும்.
பெயர் பொருத்தம் பொருந்தவில்லை என்றால் ஜாதகப் பொருத்தம் பாக்கலாம் அல்லது
ஜாதகப் பொருத்தம் பொருந்தவில்லை என்றால் பெயர் பொருத்தம் பார்க்கலாம்
திருமண வாழ்விற்கு பெயர் பொருத்தம் மற்றும் ஜாதகப் பொருத்தம் இந்த இரண்டும் அவசியமானது, இவற்றில் மிகவும் முக்கியமானது பெயர் பொருத்தம்
பெயர் பொருத்தம் முக்கியமானது என்று ஏன் ? சொல்லுகிறார்கள் என்றால் ?
ஒருவரின் பெயர் அவரின் வாழ்நாள் முழுவதும் அவருடன் இருக்கும், அவர்களின் சொந்த பெயரையே அனைவரும் கூப்பிடுவார்கள்,
பெயர் பொருத்தம்
பெயர் பொருத்தம் இரண்டு வகையாக கணிக்கப்படுகிறது
- நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது
- அதிர்வலைகளை வைத்து கணக்கிடப்படுகிறது
பெயர் பொருத்தம் நட்சத்திரத்தை வைத்து கணக்கிடும் முறை
தற்போது பரவலாக பார்க்கப்படும் பெயர் பொருத்தத்தை நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே பார்க்கப்படுகிறது,இந்த முறையையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்
பெயர் பொருத்தம் எவ்வாறு நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது என்பதினை தெளிவாக பார்ப்போம்
பொதுவாக ஹிந்து மதத்தில் ஒருவருக்கு பெயர் சூட்டுவது என்பது அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்
ஒரு குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறது, எந்தப் பாகையில் பிறந்தது என்பதனை பார்த்து, இந்த நட்சத்திரத்திற்கு உரிய முதல் எழுத்துக்களையே குழந்தையின் பெயருக்கு முதலாக வைக்கப்படுகிறது
அவ்வாறு வைக்கப்படும் பையர் அவரது வாழ்நாள் முழுவதும் அவருடன் இருக்கும், அந்த பெயரை வைத்து அழைக்கும் பொழுது அந்த நட்சத்திரத்திற்கு உரிய பலனை அவர் அனுபவிப்பார்,
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு காரணத்தை பெற்றிருக்கிறது, அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அந்தகாரத்தில் உள்ள தன்மைகள் பொதுவாக பெற்றிருப்பார்கள், இது பெண்ணுக்கும் ஆணுக்கும் இருவருக்கும் பொருந்தும்
எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த எழுத்தை முதன்மையாக கொண்டு அழைப்பார்கள் என்பதனை கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது,
S.NO | நட்சத்திரங்கள் | பெயரின் முதல் எழுத்துகள் | தொடர் எழுத்துகள் |
1 | அஸ்வினி | சு, சே, சோ, ல | செ,சை |
2 | பரணி | லி, லு, லே, லோ | சொ,சௌ |
3 | கார்த்திகை | அ, இ, உ, எ, | ஆ,ஈ. |
4 | ரோகினி | ஓ,வ,வி, வு, | வா,வீ, |
5 | மிருகசிரிஷம் | வே,வோ,கா,கி, | வை,வொ |
6 | திருவாதிரை | கு,க,ச,ஞ | கூ,கா, |
7 | புனர்பூசம் | கே,கோ,ஹ,ஹி | கெ,கை |
8 | பூசம் | ஹீ.ஹே,ஹோ,ட | கொ கெள |
9 | ஆயில்யம் | டி,டு,டே,டோ | மெ,மை |
10 | மகம் | ம,மி,மு,மெ | மா,மீ,மு |
11 | பூரம் | மோ.ட,டி,டு, | மொ,மௌ |
12 | உத்திரம் | டே,டோ,ப.பி | பா,பி. |
13 | அஸ்தம் | பூ,ஷ,ந,ட | பூ,மே |
14 | சித்திரை | பே போ ர ரி | பை, பௌ, |
15 | சுவாதி | ரு,ரே,ரோ,த | தா, |
16 | விசாகம் | தி,து, தே,தோ | தூ,தை |
17 | அனுஷம் | ந,நீ,நு,நே | நா,நீ,நூ, |
18 | கேட்டை | நோ,ய,இ,பூ. | நெ நை |
19 | மூலம் | யே,யோ.ப,டா. | பு,யூ |
20 | பூராடம் | பூ.த,ப,டா, | ஊ,எ,ஏ |
21 | உத்திராடம் | பே,போ,ஜ,ஜி, | ஓ,ஒ ஒள |
22 | திருவோணம் | ஜீ,ஜே,ஜோ,கா, | க,கா,கி,கீ, |
23 | அவிட்டம் | க,கீ கு,கூ, | ஞ,ஞா,கே |
24 | சதயம் | கோ,ஸ,ஸீ,ஸூ | தோ, தௌ |
25 | பூரட்டாதி | ஸே,ஸோ,தா,தீ, | நோ,நௌ |
26 | உத்திரட்டாதி | து,ச,ஸ்ரீ,ஞ | யா.ஞ |
27 | ரேவதி | தே,தோ,ச,சி,சா,சீ | சா,சீ |
மேலே நட்சத்திரத்திற்கு உரிய எழுத்துக்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
ஒருவருக்கு ஜாதகம் இல்லை என்றாலோ அல்லது ஜாதகம் எழுதப்பட வில்லை என்றாள் அவர்களுக்கு திருமண வாழ்க்கை நிலையை அறிய இந்த பெயர் பொருத்தம் பெருமளவு உதவுகிறது
ஜாதகம் இல்லாத ஒருவருக்கு அவருக்கு இருக்கும் பெயரை வைத்தேன் அவரின் தன்மையை அறியப்படுகிறது அதாவது ஒருவரின் பெயரின் முதல் எழுத்து எந்த நட்சத்திரத்தில் சார்ந்தது என்று முதலில் கண்டறியப்படுகிறது
அந்த முதல் எழுத்து எந்த நட்சத்திரத்தை சார்ந்தது அந்தப் பெயர் வைத்திருப்பவர் அந்த நட்சத்திர தன்மையை பெற்றிருப்பார்
பெயர் பொருத்தம் சரியாக கணக்கிடும் முறை
திருமணத்திற்கு பெயர் பொருத்தம் பார்ப்பதில் முதல் பங்கு வகிப்பது பெண்ணின் பெயர்,
ஒருவருக்கே இரு பெயர்களும் உண்டு வீட்டில் மற்றும் நண்பர்கள் கூப்பிடும் ஒரு பெயரும் பள்ளி மற்றும் கல்லூரியில் சர்டிபிகேட் இல் உள்ள ஒரு பெயரும் வேறுபட்டிருக்கலாம்
இவ்வாறு இரண்டு பெயர்கள் உள்ள ஒருவருக்கு எந்தப் பெயர் அதிகமாக அழைக்கப்படுகிறது அந்த பெயரை வைத்தே பெயர் பொருத்தம் பார்க்க வேண்டும்
பெண்ணின் பெயரில் வரும் முதல் எழுத்து மற்றும் ஆணின் பெயரில் வரும் முதல் எழுத்து இரண்டையும் முதலில் குறித்துக்கொள்ள வேண்டும்
பெண்ணின் பெயரில் உள்ள முதல் எழுத்து எந்த நட்சத்திரத்தை சார்ந்ததோ அந்த நட்சத்திரத்தை எழுத வேண்டும் பிறகு ஆணின் பெயரில் உள்ள முதல் எழுத்து எந்த நட்சத்திரத்தை சார்ந்தது அந்த நட்சத்திரத்தை எழுத வேண்டும்
இப்போது இரண்டு நட்சத்திரமும் நமக்கு நன்றாக தெரியும் அந்த நட்சத்திரத்தை வைத்து நட்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும் அந்த நட்சத்திர பொருத்தம் முக்கியமான பொருத்தங்கள் பொருந்தினால் பொருத்தம் உள்ளது என்றும் முக்கியமான பொருத்தங்கள் பொருந்தவில்லை என்றால் பொருத்தம் இல்லை என்றும் கூறுவார்கள் இதுவே பரவலாக அனைவரும் பார்க்கப்படும் பெயர் பொருத்தம்
திருமண நட்சத்திர பொருத்தம் 10 அடிப்படை பொருத்தங்களை கொண்டது
- தினப்பொருத்தம் – தின சண்டை
- கணப்பொருத்தம் – சகிப்புத் தன்மை
- மகேந்திர பொருத்தம் – புத்திர பாக்கியம்
- ஸ்திரீ தீர்க்க பொருத்தம் – சர்வ சம்பத்தும் பெறுதல்
- யோனி பொருத்தம் – தாம்பத்திய உறவு
- ராசி பொருத்தம் – வம்ச விருத்தி
- ராசி அதிபதி பொருத்தம் – சம்மந்திகள் ஒற்றுமை
- வசிய பொருத்தம் – இல்லற சுகம்
- ரஜ்ஜிப்பொருத்தம் – மாங்கல்யம்
- வேதைப் பொருத்தம் – மாங்கல்ய கயிறு
- நாடிப் பொருத்தம் – குழந்தை பாக்கியம்
- பால் பொருத்தம் – குழந்தை பாக்கியம்
மேற்காணும் பனிரெண்டு பொருத்ததில் பத்து பொருத்தம் அடிப்படை பொருத்தங்கள்
ஜாதகப் பொருத்தம் இல்லை என்பவர்களுக்கு இந்த பெயர் பொருத்தம் நல்வழியை காட்டும் மேலும் ஜாதகம் இருந்தாலும் பெயர் பொருத்தத்தை பார்ப்பதும் மிகவும் நன்று
பெயர் பொருத்தம் name matching for marriage
திருமணத்திற்கு பிறகு பெண்களின் பெயருடன் ஆண்களின் பெயர் சேர்ந்து ஒலிக்கும் பொழுது அந்த நட்சத்திரத்தின் தன்மையுடன் மற்றொரு நட்சத்திரத்தின் தன்மை சேர்ந்து ஒலிப்பதால் அவர்களின் தன்மை முற்றிலும் மாறுபடும்
சரியான நட்சத்திரங்கள் பொருந்திய நபர்களுக்கு திருமணம் செய்வதால் அவரது வாழ்வில் குழந்தை செல்வமும் மற்றும் இதர செல்வமும் பெருகும் அவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை சீராக இருக்கும்
ஹிந்து முறைப்படி திருமணத்திற்கு பார்க்கப்படும் பொருத்தங்கள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டது
ஜாதகங்கள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே கணிக்கப்படுகிறது ஜாதகம் பொருத்தம் பார்ப்பவர்கள் நட்சத்திரத்தை வைத்தே பொருத்தங்கள் கணிக்கிறார்கள்
அதே போன்று பெயர் பொருத்தம் பார்ப்பவர்களும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே பொருத்தங்கள் கணிக்கிறார்கள்
அதனால்தான் 27 நட்சத்திரங்கள் என்பது மனித வாழ்வில் ஒரு அடிப்படையான பங்கை வகிக்கிறது
அதிர்வலைகளை வைத்து கணக்கிடும் முறை
பெயர் என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல அது ஒரு அதிர்வலைகள் ( vibrations ), அந்த அதிர்வலைகளில் + charge நேர்தன்மை மற்றும் – charge எதிர்த்தன்மை போன்றவைகள் இருக்கும்
பெயர் பொருத்தம் என்பது ஒருவரது பெயரில் உள்ள அதிர்வலைகளும் மற்றொரு பெயரிலுள்ள அதிர்வலைகளும் ஒன்று சேர்ப்பதே ஆகும்
உதாரணமாக திருமணத்திற்கு பின் பெண்ணின் பெயர் முழுமை ஆக மாற்றம் அடையும் அதாவது பெண்ணின் பெயருக்கு முன் ஆணின் பெயரின் முதல் எழுத்தையும் பெண்ணின் பெயருக்கு பின் ஆணின் முழு பெயரையும் எழுதுவார்கள்
ஆணின் பெயர் ராமன்
பெண்ணின் பெயர் சீதா ( திருமணத்திற்கு முன்பு பெயர்)
பெண்ணின் பெயர் மாற்றம் அடையும் விதம்
திருமணத்திற்கு பின்பு
ரா. சீதா ராமன்
பெண்ணின் பெயர் முழுமையாக மாற்றமடைந்தது
திருமணத்திற்கு முன்பு பெண்ணை அழைக்கும் வீதமும், திருமணத்திற்கு பின்பு பெண்ணைஅழைக்கும் வீதமும் முழுமையாக மாற்றமடைந்து இருப்பதை பார்க்கலாம்
இவ்வாறு முழுமையாக மாறும் பொழுது அந்தப் பெயரில் உள்ள அதிர்வலைகள் மாற்றம் ஏற்படும்,
அதிர்வலைகளை பற்றி பார்ப்போம்
அதிர்வலைகள் முன்று வகை படும் அவை
நேர்மறை POSITIVE
எதிர்மறை NAGETIVE
நடுநிலை NUTURAL
ஒவ்வொரு மனிதனையும் அவனை சுற்றி ஒரு சக்கரம் இயங்கிக் கொண்டிருக்கிறது, அந்த சக்கரம் அவர்களைச் சுற்றியுள்ள பாசிட்டிவ், நெகட்டிவ் மற்றும் நடுநிலை எனர்ஜி களை சார்ந்தது,
பாசிட்டிவ் எனர்ஜி என்பது மனித உடலுக்கும் மூளைக்கும் மற்றும் நரம்புகளுக்கும் நன்மை தரக்கூடியது
நெகட்டிவ் எனர்ஜி எனபது மனித உடலுக்கும் மூளைக்கும் மற்றும் நரம்புகளுக்கும் தீமைகள் தரக்கூடும்
நடுநிலை எனர்ஜி என்பது மனிதனுக்கு நன்மையும் இல்லை தீமையும் இல்லை
நேர்மறை பெயர் தன்மை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ அவர்களை சுற்றி உள்ள சக்கரம் பாசிட்டிவ் எனர்ஜி யால் உருவாக்கப்பட்டவை, இவர்களுடன் எதிர்மறை தன்மை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ சேரும்பொழுது இவர்களின் நேர்மறை தன்மை அதாவது இவர்களை சுற்றி உள்ள நேர்மறை தன்மை கொண்ட சக்கரம் எதிர்மறை தன்மையால் உடைந்துவிடும்
எதிர்மறை பெயர் தன்மை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ அவர்களை சுற்றி உள்ள சக்கரம் எதிர்மறை எனர்ஜி யால் உருவாக்கப்பட்டவை, இவர்களுடன் நேர்மறை தன்மை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ சேரும்பொழுது இவர்களின் எதிர்மறை தன்மை அதாவது இவர்களை சுற்றி உள்ள எதிர்மறை தன்மை கொண்ட சக்கரம் நேர்மறை தன்மையால் பூர்த்தி அடைந்து நடுநிலை கோ அல்லது நேர்மறை தன்மை கோ மாற்றம் பெற வாய்ப்பு உள்ளது
உதாரணமாக கணித சூத்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம்
(+) + (+) = +
(-) + (-) = –
(+) + (-) = + OR –
(-) + (+) = – OR +
பெண் பெயர் (+) நேர்மறை தன்மை + ஆண் பெயர் நேர்மறை தன்மை (+)
இவை இரண்டும் சேர்ந்தால் நேர்மறை தன்மை, இவர்களின் திருமண வாழ்வில் நேர்மறை தன்மை அதிகரித்து குழந்தைகள் மற்றும் பெரும் செல்வத்துடன் வாழ்வார்கள், உடல் ஆரோக்கியம் இருக்கும் நன்றாகவே இருக்கும்
பெண் பெயர் (-) எதிர்மறை தன்மை + ஆண் பெயர் (-) எதிர்மறை தன்மை
இவை இரண்டும் சேர்ந்தால் எதிர்மறை தன்மை அதிகரிக்கும், குழந்தைகள் இருக்கும் ஆனால் பணக் கஷ்டத்துடன் வாழ்வார்கள் இருவருக்கு அல்லது இருவரில் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மனக்கவலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
பெண் பெயர் (+)நேர்மறை தன்மை + ஆண் பெயர் (-)எதிர்மறைத் தன்மை
பெண்ணின் பெயர் மற்றும் ஆணின் பெயர் இரண்டையும் சேர்த்து பார்க்கும்போதுதான் நேர்மறை தன்மை உள்ளதா நல்லது எதிர்மறைத் தன்மை உள்ளதா என்பதனை கணிக்க முடியும்,
இவற்றில் நேர்மறை தன்மை உள்ளது என்றால் குழந்தைகள் மற்றும் செல்வத்துடன் வாழ்வார்கள், உடல் ஆரோக்கியமும் திருமண வாழ்க்கையும் நன்றாகவே இருக்கும்
எதிர்மறைத் தன்மை உள்ளது என்றால் குழந்தைகள் இருக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது மற்றும் செல்வம் அதிகம் இருக்காது மேலும் இருவரில் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் குறைபாடுகள் இருக்கும்
பெண் பெயர் எதிர்மறைத் தன்மை ஆண் பெயர் நேர்மறை தன்மை
பெண்ணின் பெயர் மற்றும் ஆணின் பெயர் இரண்டையும் சேர்த்து பார்க்கும் பொழுதுதான் நேர்மறை தன்மை உள்ளதா அல்லது எதிர்மறை தன்மை உள்ளதா என்பதினை கணிக்க முடியும் இவற்றில் நேர்மறை தன்மை உள்ளது என்றால் குழந்தை மற்றும் அதிக செல்வத்துடன் வாழ்வார்கள் உடல் ஆரோக்கியமும் திருமண வாழ்க்கையும் சிறப்பாகவே இருக்கும்
எதிர்மறைத் தன்மை உள்ளது என்றால் குழந்தைகளும் இருக்கும் பணக் கஷ்டமும் இருக்கும் இருவரில் ஒருவருக்கு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும்,
இருபெயர்கள் உள்ளவர்கள் கண்டிப்பாக இரண்டு பேருக்குமே பெயர் பொருத்தம் பார்க்க வேண்டும்
positive and negative energy siddhaastrology
உதாரணமாக
மகா லக்ஷ்மி என்ற பெயருடைய ஒரு பெண்ணிற்கு இரண்டு விதமாக பெயர்களை அழைக்கின்றனர்
ஒருவர் மகா என்றும் மற்றவர்கள் லட்சுமி என்றும் அழைப்பார்கள் இவர்களின் திருமணத்தின் பொழுது பத்திரிக்கையில் மகாலஷ்மி என்றே குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது மகா என்கின்ற லக்ஷ்மி என்று குறிப்பிடப்பட்டிருக்கும்
இத்தகைய பெயர் உடையவர்கள் பெயர் பொருத்தம் பார்க்கும் பொழுது இரண்டு பெயர்களையும் வைத்து பார்க்க வேண்டும் அதாவது மகா என்ற எழுத்தை வைத்து ஒரு பெயர் பொருத்தமும்,
லக்ஷ்மி என்ற எழுத்தை வைத்து ஒரு பெயர் பொருத்தமும் பார்ப்பது மிகவும் அவசியமானது
மேலும் தன்னுடைய சர்டிபிகேட் இல் முழுமையான பெயர் இருக்கும் அதனால் தன் முழு பெயரை வைத்தும் பொருத்தம் பார்ப்பது அவசியமானது இதில் முதல் பெயரை வைத்து பார்க்கப்படும் பொருத்தமும் முழு பெயரைவைத்து பார்க்கப்படும் பொருத்தமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்,
இதேபோன்று இரண்டு பெயருடைய ஆண்களுக்கும் இது பொருந்தும்
பெயர் பொருத்தம் என்பது பொதுவாக முதல் எழுத்தில் வரும் நட்சத்திரத்தை கொண்டே பார்க்கப்படுகின்றது இதுவே சரியாக இருக்கும்
நாடுகளில் மட்டுமே பெயருக்குரிய அதிர்வுகளை வைத்து பொருத்தம் பார்க்கின்றனர் இதைப்பற்றி நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை
இருப்பினும் இரண்டு பெயர் பொருத்தமும் நம்பிக்கை உடையதே ஆகும் பெயர் பொருத்தம் பார்க்கும் பொழுது எவ்வாறு ஒருவர் தன்னை கூப்பிடுகிறார்கள் அந்த பெயரை வைத்தே பார்க்கப்பட வேண்டும் சர்டிபிகேட் இல் உள்ள முழு பெயர் அதாவது இனிஷியல் உள்ள முழு பெயரை வைத்து பார்ப்பது கூடாது

குறிப்பு பெயர் பொருத்தம்
பெயர் பொருத்தம் பார்க்கும் பொழுது சிலர் இதை தவறாக பயன்படுத்துகின்றனர்
பெயர் பொருத்தம் பார்க்கும் பொழுது பெயரில் தோஷம் உள்ளதாகவும் அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு இந்த பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர் அவ்வாறு கூறுவது மிகவும் தவறானது
நட்சத்திரத்திற்கு உரிய முதல் எழுத்தைக் கொண்டு பெயர்கள் உருவாக்கப்படுகின்றது அவ்வாறு உருவாக்கப்பட்ட பெயர்கள் அந்த நட்சத்திரத்தின் பண்புகளையும் அந்த ராசியின் பொதுப் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கும் அந்த ஜென்ம நட்சத்திரத்தின் தன்மையை அந்த நபர் பெற்றிருப்பர் இதை மாற்ற முடியாது
இதை அறியாதவர்கள் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக பணத்தை செலவு செய்து ஏமாறுகிறார்கள்
ஜாதகத்தை வைத்து கட்டங்களைப் பார்த்து தோஷங்கள் உள்ளது என்று கூற முடியுமே தவிர ஒருவரின் பெயரை வைத்து பெயரில் தோஷம் உள்ளது இந்த பெயரை வைத்து இருந்தால் தோஷம் இருக்கும் இந்த பெயரை வைத்து இருந்தால் திருமணம் தடங்கள் இருக்கும் இந்தப் பெயரில் இந்த வார்த்தை வரக் கூடாது என்று கூறுவது மிகவும் தவறானது
எனவே பெயர் பொருத்தம் என்பது ஒருவரின் திருமண வாழ்விற்கு மிகவும் முக்கியமானது இதை தெளிவாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளவும்
பெயர் பொருத்தம்
பெயர் பொருத்தம் என்பது திருமண வாழ்க்கை அமைதியாகவும் சுகமாகவும் அனைத்து செல்வங்களை பெறுவதற்கும் வழிவகுக்கும் இதனால்தான் இது திருமணத்திற்கு முன்பாக பார்க்கப்படுகிறது
Social Media
Facebook : Horoscope Matching
home Page : Siddhaastrology