panguni matham 2022 bad effects: பங்குனி மாதத்தில், இந்த ராசிகளுக்கு பண வரவு குறையும், பிரச்னைகள் அதிகரிக்கும்… கவனம் தேவை

  • மீன ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் பங்குனி மாதமாகத் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • குரு அதிபதியாக இருக்கக்கூடிய மீன ராசியில் நவகிரக தலைவராகவும், நண்பராகவும் இருக்கும் சூரியன் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
  • சூரியனும், மற்ற சிலகிரகங்களின் அமைப்பும் எப்படிப்பட்ட பலன்கள் தரும். எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம்

மேஷ ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். நிதி நிலை பலவீனமாக இருக்கும் என்பதாலும், முதலீடுகள் செய்ய சாதகமான காலம் இல்லை என்பதால் எந்த ஒரு முதலீடுகள் செய்ய நினைத்தாலும் சரியான ஆலோசனையும், சிந்தனையும் தேவை.

மாணவர்கள் கல்வியிலும், அவர்களின் லட்சியத்திலும் சிந்தனையோடு, கவனமாக இருக்கவும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், செலவுகளைக் கவனமாகக் கையாளவும். திருமண உறவின் விட்டுக் கொடுத்துச் செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

பங்குனி மாத ராசிபலன் : மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசி மாதபலன்

​கடகம்

பங்குனி மாதத்தில் கடக ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த மாதம் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் கோபப்படுவதை நிறுத்தி, அவர்களின் தவறுகளைப் புரிய வையுங்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தொழில், வியாபாரத்தில் தேவையற்ற சிக்கல் ஏற்படலாம். வாடிக்கையாளர்களை மதித்து நடப்பதோடு, நிதானத்து செயல்படவும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம், சஞ்சலம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய மாதம். படிப்பில் கடினமாக உழைக்காவிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம்.

பயணங்கள் செய்வதில் சரியான திட்டமிடல் அவசியம். பயணத்தால் அலைச்சலும், உடல் அசதி உங்களை வாட்டும்.

​சிம்மம்

சிம்ம ராசி அதிபதியான சூரியன் ராசிக்கு 8ம் வீடான ஆயுள், நோய் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் ராசி அதிபதியாக இருந்தாலும் அவ்வளவு நல்லது இல்லை. குடும்பத்தில் உறவுகள் மோசமடையும். வாக்குவாதங்கள் ஏற்படுவதால் மனஸ்தாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் குறையும்.

உணவு விஷயத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்னைகளால் நீங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், வரவறிந்து செலவு செய்யவும். உத்தியோகத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். சிறிய பிழைகளால் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தங்க மோதிரம் அணிவதால் இவ்வளவு அதிர்ஷ்டம் ஏற்படுமா? – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

​தனுசு ராசி

தனுசு ராசியினர் இந்த பங்குனி மாதத்தில் கவனமாக செயல்படவும். உங்கள் வேலை பாதுகாப்பின்மையுடன் இருப்பதாக உணர்வீர்கள். அதே சமயம் உங்கள் வேலையை மாற்றவும் சாதகமற்ற நேரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதும், புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் எச்சரிகை தேவை.

உங்க்கள் குடும்ப வாழ்க்கையில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். தேவையற்ற எரிச்சல் மன நிலையுடன் இருப்பீர்கள். அதனால் துணையுடனான உறவில் நெருக்கம் குறைந்து போகும். உங்கள் பேச்சு, செயலால் குடும்பத்தினரைக் காயப்படுத்த வேண்டாம்.

பங்குனி உத்திரம் -புராண கதை மற்றும் முக்கியத்துவம் என்ன? – ராமன் சீதையையும் கரம் பிடித்த நாள்

​கும்பம்

கும்ப ராசிக்கு வேதனைத் தரக்கூடிய சில நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு, அத்தியாவசிய செலவுகளில் மட்டும் கவனம் செலுத்தவும். நெறிமுறையற்ற வகையில் பணம் சம்பாதிக்க ஆசைப்படாதீர்கள்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சரியான தூக்கத்தையும், உணவையும் எடுத்துக்கொள்ளுங்கள். நொறுக்குத் தீனி, துரித உணவுகளைத் தவிர்க்கவும். உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள். எந்த வேலையும் செய்ய கடினமாக இருப்பதாக உணர்வீர்கள். சிலருக்கு பழைய நோயால் பாதிக்கப்படலாம். நீங்கள் நம்பிக்கை குறைவாக உணருவீர்கள்.

Source link

Leave a Comment