rahu ketu transit good effects: ராகு கேது பெயர்ச்சி : அதிர்ஷ்ட பலன் பெறப்போகும் ராசிகள்

  • நிழல் கிரகங்கள் என ராகு – கேதுவைப் பார்த்தாலும், கிரகப் பெயர்ச்சிகளில் மிக முக்கியமானதகாப் கருதப்படுகிறது.
  • ராகு என்பது உலக விஷயங்களை, பொருட்களை மனது கவனிக்கு போது, கேது என்பவர் அதிலிருந்து விடுபட நம் மனதை அறிவுறுத்தும்.
  • கேது அந்த உலக விஷயங்களில் இருக்கக் கூடிய சாரத்தை உணரச் செய்கிறது. இருப்பினும் கேது எதிலும் திருப்தியைக் கொடுக்காது.
  • ராகு எதையும் அனுபவிக்கச் சொல்லும். ஆனால் கேது உண்மையான ஞானத்தைப் பெற வழியைத் தேட முயற்சிக்கும்.

​ராகு கேது பெயர்ச்சி எப்போது?

தற்போது ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் ராகு-கேது அசுபமான கிரகங்களாகக் கருதப்பட்டாலும், சில சூழ்நிலைகளில் அவை மிகவும் நல்ல பலன்களையும் அளிக்கின்றன. சிலரின் வாழ்க்கையை வண்ணமயமானதாக மாற்றக்கூடியது இந்த ராகு கேது பெயர்ச்சி.

அதே சமயம் அவற்றின் அமைப்பு சில ராசிகளுக்கு மோசமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது சிறப்பான பலன்களைப் பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

​மிதுனம்

மிதுன ராசிக்கு ராகு-கேது பெயர்ச்சி சுப பலன்களை ஏற்படுத்தும். அடுத்த ஒன்னறை ஆண்டு காலம் ராகு – கேதுவின் அமைப்பால் உங்களின் வேலை மற்றும் எந்த ஒரு விஷயத்திலும் இருந்த தடைகள் விலகும். நீங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெற முடியும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வு பெற சாத்தியமான விஷயங்கள் நடக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்குச் சாதகமான காலமாக அமையும்.

உங்கள் முயற்சிகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்பும், அதன் மூலம் அனுகூலமும் ஏற்படும்.

குரு, ராகு – கேது, சனி பெயர்ச்சிகள் – ஏப்ரல் மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகள்

​விருச்சிக ராசி மீது ராகு-கேதுவின் தாக்கம்

விருச்சிக ராசிக்கு ராகு-கேதுவின் பெயர்ச்சியானது சாதகமானதாக அமையும். உங்களுக்கு திடீர் பண ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அன்புச் சகோதரர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் உறவுகள் வலுப்படும், சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் வேலையை சிறப்பாக செய்வீர்கள். மேலதிகாரிகளின் மதிப்பும், மரியாதையும் கிடைப்பதோடு, பதவி உயர்வு கிடைக்கவும் சாத்தியமான காலமாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றியும், புதிய இலக்கை எட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வணிக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, நிதி ரீதியான நன்மைகளைப் பெற்றிடுவீர்கள்.

ராகுவைப் போல் கெடுப்பவனும் இல்லை, கேதுவைப் போல் கொடுப்பவரும் இல்லை என்கிறார்கள் எப்படி தெரியுமா?

​தனுசு ராசிக்கு ராகு-கேதுவின் தாக்கம்

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி மிகவும் சாதகமாக பலன்கள் தருவதாக இருக்கும். துறை ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். இதன் மூலம், உங்கள் பணியிடத்தில் நற்பெயரை உருவாக்க முடியும். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்களுக்கும், பங்கு சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்பவர்களுக்கும் அதிர்ஷ்டம் தரக்குடிய லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல லாபத்தை பெற்றிட முடியும்.

குடும்பம் மற்றும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இருந்த பல பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள், அதனால் மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயர்வு கிடைப்பதோடு, பல புதிய உறவுகள் கிடைக்கும்.

​மகர ராசிக்கு ராகு-கேதுவின் தாக்கம்

மகர ராசியினருக்கு ராகு-கேதுவின் தாக்கம் மிகவும் சாதகமாக இருக்கும். அடுத்த ஒன்னறை ஆண்டில் உங்கள் முயற்சிகள் அதிகம் எடுப்பீர்கள். அதன் மூலம் நல்ல லாபத்தையும் ஈட்டுவீர்கள். அரசு சார்ந்த வேலைகள் நடக்க அரசு அதிகாரிகள் உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் சிறப்பாக நடந்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைத் தருவதாக இருக்கும். பல சவால்கள் வந்தாலும், அதை சமாளித்து நற்பலன் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் தாம்பத்தியம் எப்படி அமையும்? காம திரிகோணம் என்றால் என்ன?

​கும்ப ராசிக்கு ராகு-கேதுவின் தாக்கம்

கும்ப ராசியினருக்கு ராகு-கேது பெயர்ச்சி பெரியளவில் சாதகமானதாக இருக்கும். உற்சாகத்துடனும், முழு பலத்துடனும் எந்த ஓரு செயலையும் செய்து அதில் முன்னேறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஏதேனும் புதிய முயற்சிகள் அல்லது புதிய தொழில் செய்ய முயன்றால் குறைந்த காலத்தில் அதில் வெற்றி பெறவும், மக்கள் மத்தியில் நன்மதிப்பென் பெறவும் வாய்ப்புகள் அதிகம்.

முதல் பார்வையிலேயே தன் மனதைப் பறிகொடுக்கும் ராசிகள் : காதலில் எளிதாக விழும் ராசிகள்

வேலை, தொழில் ரீதியாக சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி ததும்பக்கூடியதாக இருக்கும். குடும்பம் மற்றும் பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

Source link

Leave a Comment