rishabam vara rasi palan: வார ராசிபலன் – மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசி 2022 மார்ச் 21 முதல் 27 வரை வார பலன் – check predictions for aries, taurus, gemini, cancer signs weekly horoscope from 21 to 27 march 2022

வார தொடக்கத்தில் கிரக நிலை :
மேஷத்தில் ராகு, துலாம் ராசியில் சந்திரன், கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, மீனத்தில் புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

மார்ச் மாதத்தில் இந்த வாரம் இரண்டு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சி நிகழப் போகிறது. மீன ராசியில் புதன் சஞ்சாரம் ஏற்படும் போது அங்கிருக்கும் சூரியனுடன் சேர்ந்து புதாத்திய யோகம் ஏற்படும். இன்று வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரிக்கின்றனர்.
இந்த கிரக சூழலில் ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் வார ராசிபலன்: அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும்
மேஷ ராசிக்கு இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நல்ல செய்திகளும், நல்ல அதிர்ஷ்டங்களும் உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் இன்பமான நேரத்தைச் செலவிடுவீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
இருப்பினும் மார்ச் 22 முதல் 24 வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் கவனமும், நிதானமும் தேவை. புதிய ஒப்பந்தங்களைத் தவிர்க்கவும். உங்கள் பேச்சில் கனிவு தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
சந்திராஷ்டம தினங்கள் : மார்ச் 22 முதல் 24 வரை

ரிஷபம் வார ராசிபலன்: குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்
ரிஷப ராசிக்கு இந்த வாரம் பணியிடத்தில் புதிய பொறுப்புகள், கெளரவம், ஊதிய உயர்வு போன்ற மகிழ்ச்சியான வாரமாக செல்லும். உங்களின் நிதி நிலை உயர்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. முடிக்கப்படாத வேலைகள் முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

உங்கள் வேலையில் ஆற்றலும், அர்ப்பணிப்பும் சேர்ந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளின் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள். வார இறுதியில் சிறு பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. வாரத்தின் பிற்பாதியில் உங்களுக்கு சந்திராஷ்டமம் வருவதால் அந்த நாட்களில் கூடுதல் கவனமாக உங்கள் பணிகளை செய்யவும். பேச்சு, செயலில் நிதானத்துடன் இருந்தால் அற்புதப் பலன்களைப் பெற்றிட முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
சந்திராஷ்டம தினங்கள் : மார்ச் 24 முதல் 27 வரை

மிதுனம் வார ராசிபலன்: வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்
மிதுன ராசியினர் இந்த வாரம் வேலை மற்றும் ஆன்மிகம் சம்பந்தமான பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. தொண்டு, சமூக பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமை காரணமாக, உங்கள் எதிரிகள் கூட உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். தாயிடம் இருந்த மன வருத்தத்தை விலக்கி அன்புடன் நடந்து கொள்ளவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 8

மிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 : உடல் நலனில் கவனம், திருமணம் கைகூடும்
கடகம் வார ராசிபலன்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
கடக ராசிக்கு இந்த வாரம் வியாபாரம் தொழிலில் நினைத்தளவுக்கு வெற்றி அடைய கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். மனம் சோர்வடையாமல் உங்கள் செயல்களில் ஈடுபடவும். வினை தீர்க்கும் விநாயகனை வணங்கி உங்கள் செயல்களை தொடங்க வில்லங்கங்கள் விலகும். காரிய சித்தி ஏற்படும். குறிப்பாக தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.

தொழில், வேலையில் பணிச்சுமை இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்களின் பேச்சு, விவாதம் சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் அன்புடனும், ஆதரவாக நடந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2

Source link

Leave a Comment