sukra peyarchi in kumbam: வருமானத்தை அள்ளித் தரப்போகும் சுக்கிரன் : கும்ப ராசியில் சுக்கிரன் அருளும் அற்புதம் – venus transit in aquarius march 31 : these zodiac sign gets unexpected cash flow

வருமானம், சுக போகம், ஆடம்பர வாழ்க்கை, காதல், திருமணம் போன்ற விஷயங்களை அருளக்கூடியவர் சுக்கிர பகவான். தற்போது மகர ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் மார்ச் 31ம் தேதி காலை 8.54 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். ஏப்ரல் 27ம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.

குரு பகவானுக்கு அடுத்தபடியாக, மிக சிறப்பான அற்புத பலன்களை சுக்கிரன் அள்ளித் தரக்கூடியவர். சனிபகவான் அதிபதியாக இருக்கும் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த ராசியினருக்கெல்லாம் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்: பல வழிகளில் வருவாய் வரும்
மேஷ ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்கிறது. அதனால் பொருளாதார ரீதியாக உங்களை வலிமையாக்கும். இந்த காலகட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளிலிருந்து சம்பாதிப்பதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வணிகத்தில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகலாம். பயணங்கள் பயனுள்ள முடிவுகளைத் தரும். உங்களுக்கு நிதி முன்னேற்றம் ஏற்படும்.

அஸ்தங்கத்திலிருந்து விடுபடும் குரு : கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சிம்மம்: கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும்
சிம்ம ராசிக்கு 7ம் வீடான வாழ்க்கைத் துணை, தொழில் பங்குதாரர் ஸ்தானத்தைக் குறிக்கக்கூடிய வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்கிறது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குச் சாதகமானதாக அமையும். உங்களின் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சார்ந்த பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பயணங்கள் வெற்றியடையும், உங்கள் கடின உழைப்பும் முயற்சியும் நிச்சயமாக நற்பலனைத் தரும்.

சிம்மம் தமிழ் சுபகிருது புத்தாண்டு ராசி பலன் 2022 – 2023 – சனி பக்கபலமாக இருப்பார்

துலாம்: மகிழ்ச்சி அதிகரிக்கும்
துலாம் ராசிக்கு பல்வேறு வழிகளிலிருந்து நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பல புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பும், லாபத்திற்கான வாய்ப்பும் ஏற்படும்.
பொருளாதார ரீதியாக நன்மை உண்டாகும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கும்.

நல்ல வருமானம் காரணமாக, பொழுதுபோக்குகள் வேடிக்கைக்காக அதிகம் செலவிடுவீர்கள். கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்குச் சாதகமாக இருக்கும்.

மகரம்: பணம் வந்து சேரும்
மகர ராசிக்கு 2ம் வீடான தன ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வது வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். உங்களின் முந்தைய முதலீடுகள், பரிவர்த்தனைகளிலிருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்களுக்கு வர வேண்டிய பணம், தடைப்பட்டிருப்பின் அது வந்து சேரும்.

தொழில், வியாபாரத்தில் மிகவும் சாதகமானதாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறவும், அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.. சம்பள உயர்வு கிடைக்கவும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபமும் வெற்றியும் நிச்சயம்.

கும்பம்: உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்
கும்ப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் எந்த ஒரு துறையிலிருந்தாலும் அதில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. பயணங்கள் சாதகமானதாக அமையும். உத்தியோகஸ்தர்களின் புதிய திட்டங்கள், செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்களின் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள், டிராவல் ஏஜென்ட்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பான பலன்களைத் தரும். நிதி வளம் பெற வாய்ப்பு உள்ளது. இந்தக் காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் எந்த வகையான முதலீடு செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

Source link

Leave a Comment