thulam rahu ketu peyarchi 2022: துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 – நிதி நெருக்கடியை சாமாளிக்க தயாராகுங்கள்… – libra rahu ketu planet transit effects 2022: thulam rasi shortage in cash flow

ராகு கேது பெயர்ச்சி எப்போது?
நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் என அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிலவ ஆண்டு மார்ச் 21ம் தேதி மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நிகழ்வின் போது ராகு ரிஷபத்தில் இருக்கும் கார்த்திகை 2ம் பாதத்திலிருந்து மேஷ ராசியில் இருக்கும் கார்த்திகை 1ம் பாதத்திற்கும், கேது விருச்சிகத்தில் இருக்கும் விசாகம் 4ம் பாதத்திலிருந்து, உங்கள் ஜென்ம ராசியான துலாம் ராசி விசாக நட்சத்திரம் 3ம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு – கேது பெயர்ச்சி நிகழ்வதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொது பலன்கள் :
அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியான ராகு, துலாம் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். அதே போல ஞானத்தை தரவல்ல கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

நீங்கள் எதிர்பார்த்த பலனை அடைய உங்கள் தொழில், வேலை, பொறுப்புக்கள் என ஏதுவாக இருந்தாலும் அதில் கூடுதல் உழைப்பு போட வேண்டி இருக்கும். அடிக்கடி வெளியூர் சென்று வருவதற்கான வாய்ப்பும், அதில் சாதக பலனை எதிர்பார்க்கலாம். திடீர் செலவுகள் உங்களின் நிதி ரீதியான நெருக்கடிகள் ஏற்படலாம்.

ராகு கேது பெயர்ச்சியால் சிக்கி கெடுபலன் பெறப்போகும் ராசிகள்

சிறப்பான பலன்கள்:
வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும், பிறமொழி பேசுபவர்களாலும் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தைத் தரும் பாதையைக் காட்டும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வது அவசியம். மனதில் உருவாகும் தனிமை, மன சோர்வு, பழைய எண்ணங்கள் உங்களை சிந்திக்க விடாமல் கஷ்டப்படுத்தும்.

30 வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு வரும் சனி : 5 ராசிகளுக்கு ராஜ யோக பலன்கள்

நிதி நிலை :
புதிய முதலீடுகள், அதிக முதலீடுகள் கொண்ட தொழில், அல்லது வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம். அல்லது பெரிய லாபம் கிடைக்கும் என நம்பி பேராசையால் எதிலும் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். நீங்கள் எதிர்பாராத செலவுகள், நிதி நெருக்கடியும், செலவுகளை அதிகரித்து சேமிப்பை கரைக்கக்கூடும்.

உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதே சமயம் கடின வேலையைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். இருப்பினும் அதற்கான பாராட்டும், அங்கிகாரமும் கிடைக்க காலதாமதம் ஆகும். வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அது உங்களுக்கு சோர்வு, அலைச்சலைத் தரக்கூடியதாக இருக்கும்.

குரு, ராகு – கேது, சனி பெயர்ச்சிகள் – ஏப்ரல் மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகள்

தொழில் :
கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்கள், உங்களின் பங்குதாரர்களுடன் இணக்கமான சூழலைக் கடைப்பிடிக்கவும். அதோடு சூழலுக்கேற்ப ஆலோசித்து முடிவெடுக்கவும். உங்களின் தொழில் முதலீடு அல்லது விரிவுபடுத்துவதற்கான செயல்பாடுகளில் கவனமுடன் செயல்படுவது அவசியம். தொழில் ரீதியான எதிரிகள், எதிர்ப்புகளை சிறப்பாக சமாளிப்பீர்கள்.

உடல்நலம் :
ஆரோக்கியம் மேம்படும். இதற்கு முன் இருந்த உடல் நல பிரச்னைகள் மெல்ல, மெல்ல குறையும். உங்களுக்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். உடல் நலனில் கவனமுடன் இருக்கவும்.

பெண்கள் :
திருமணமானவர்கள் உங்கள் துணையுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும். விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். சகோதர / சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படக்கூடும்.

பங்குனி மாதம் 2022 ராசிபலன் : இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது!

மாணவர்கள் :
மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்திப் படிக்கவும். உங்களின் செயல்பாடு ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். நல்ல நண்பர்களின் பழக்கவழக்கங்களை மட்டும் வைத்துக் கொள்ளவும். கடினமான நேரங்களில் ஆசிரியர்கள், பெற்றோரின் சரியான ஆலோசனையுடன் செயல்படவும்.

பரிகாரம் :
வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடவும்.
மகாலட்சுமி வழிபாடு உங்களின் மனக்குழப்பத்தை நீக்கி தெளிவையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

Source link

Leave a Comment