Viruchigam Rahu Ketu Peyarchi Palan: விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி – மிக அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள்

ராகு கேது கிரகங்களுக்கு என தனியோ,நட்சத்திரமோ கிடையாது என்பதால், எந்த ராசியில் ராகு, கேது சஞ்சரிக்கின்றவோ அவர்கள் தரக்கூடிய பார்வை பலனை அள்ளித் தருவார்கள்.

​கிரக சாதக மாற்றம்:

கிரக சாதக மாற்றம்:

ராகு – கேது மட்டுமில்லாமல், அடுத்து குரு 5ம் இடத்திற்கு மாறுவதும், தொடர்ந்து சனி 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக மாறுவதும் சிறப்பான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் பொருளாதார வெற்றி கிடைக்கும்.

ராகு 6ல் இருப்பதால் சிலருக்கு மட்டும் ஏதேனும் அரிதாக சிறியளவிலான உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றபடி இதுவரை பெரிய ஆரோக்கிய பிரச்னைகளை சந்தித்து வந்தவர்களுக்கு அது உடல் நலம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஒட்டுமொத்தமாகச் சாதக பலன்கள் தரக்கூடியதாகத் தான் இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சியால் சிக்கி கெடுபலன் பெறப்போகும் ராசிகள்

​விருச்சிக ராசி பெறப்போகும் அற்புத பொது பலன்கள்:

விருச்சிக ராசி பெறப்போகும் அற்புத பொது பலன்கள்:

12 ராசிகளில் விருச்சிக ராசிக்கு தான் நடக்க உள்ள ராகு கேது பெயர்ச்சி மூலம் மிகவும் சாதகமான பலன்கள், அதிர்ஷ்டம் தரக்கூடிய பலன்கள் கிடைக்க உள்ளது.

திருமண முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு விரைவாக நல்ல வரன் அமையக்கூடிய வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகளுக்குச் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

30 வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு வரும் சனி : 5 ராசிகளுக்கு ராஜ யோக பலன்கள்

கவனமாக இருக்க வேண்டியவை:

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

சிந்தித்துப் பேசுவதும், யாரிடம் பேசுகின்றோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். எப்போதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். பழக்கங்களில் கவனம் தேவை. பகையைத் தவிர்க்கவும். பண பரிவர்த்தனையில் கவனம் செலுத்துங்கள்.

​தொழில் முன்னேற்றம்:

தொழில் முன்னேற்றம்:

எந்த ஒரு தொழில், வியாபாரம் செய்தாலும் அதில் நீங்கள் ராஜாவாகத் திகழ்வீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம், புதிய தொழில் தொடக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம். தடைகளைத் தகர்த்தெரிந்து வெற்றி கொள்வீர்கள்.

குரு, ராகு – கேது, சனி பெயர்ச்சிகள் – ஏப்ரல் மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகள்

உத்தியோகம்:

நீங்களே எதிர்பாராத அளவிற்கு பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைக்கும். திடீர் முன்னேற்றம், அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களின் திறமைகள் வெளிப்படும். இலக்கை அடைய சிறப்பாக செயல்படுவீர்கள்.

​நிதி நிலை :

நிதி நிலை :

பொருளாதார நிலை மிகவும் சிறக்கக்கூடிய காலம்.

அதே போல கேது உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் உங்களுக்கு பிடித்தமான வகையில் செலவழிப்பீர்கள். சுப செலவுகளாகவும், தான தர்மம் செய்தல், ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கான செலவு என நீங்களே விரும்பி செய்யக்கூடிய விஷயங்கள் நடக்கும். சுற்றுலா, ஆன்மிக யாத்திரை செல்லுதல் போன்றவற்றிற்குச் செலவு செய்வீர்கள்.

கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். பணப்பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

ராகு கேது பெயர்ச்சியால் சிக்கி கெடுபலன் பெறப்போகும் ராசிகள்

குடும்பம்: பரிகாரம்

குடும்பம்:

ஜென்ம ராசியில் சஞ்சரித்த கேது தற்போது 12ம் இடத்திற்கு மாறுவதால் இதுவரை இருந்த திருமண தடைகள் நீங்கும். திருமண யோகம் கைகூடும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.

வழிபாடு :

அருகில் இருக்கும் ஆலயங்களில் இருக்கும் நாகர் சன்னதியில் வழிபடவும்.

முடிந்தால் நாகர்கோவில், திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் போன்ற நாக ஆலயங்களுக்குச் சென்று வழிபடவும்.

அடிக்கடி அருகில் இருக்கும் அரசமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரையும், அவருக்கு அருகில் இருக்கும் நாகர் சிலைகளையும் வழிபட்டு வரவும்.

துர்க்கை, பைரவரை வழிபடவும்.

Source link

Leave a Comment