viruchigam vaara rasipalan: வார ராசிபலன் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசி 2022 மார்ச் 21 முதல் 27 வரை வார பலன் – check predictions for leo virgo libra scorpio scorpio signs weekly horoscope from 21 to 27 march 2022

வார தொடக்கத்தில் கிரக நிலை :
மேஷத்தில் ராகு, துலாம் ராசியில் சந்திரன், கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, மீனத்தில் புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

மார்ச் மாதத்தில் இந்த வாரம் இரண்டு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சி நிகழப் போகிறது. மீன ராசியில் புதன் சஞ்சாரம் ஏற்படும் போது அங்கிருக்கும் சூரியனுடன் சேர்ந்து புதாத்திய யோகம் ஏற்படும். இன்று வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரிக்கின்றனர்.
இந்த கிரக சூழலில் ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சிம்மம் வார ராசிபலன்: பயணம் செய்ய வேண்டி இருக்கும்
சிம்ம ராசிக்கு நிதி நிலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்வதற்கான பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் வியாபாரத்தில் சகஜ நிலை நீடிக்கும். பணியிடத்தில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். சிலரின் மனதில் வேலை மாற்றம், தொழில் திட்டங்கள் குறித்து எண்ணங்கள் வந்து செல்லும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் : முயற்சிகள் நற்பலன் கிடைக்கும்,ஆரோக்கியத்தில் கவனம்
கன்னி வார ராசிபலன்: ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும்
கன்னி ராசிக்கு இந்த வாரம் குடும்பத்தின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில், வேலை என இரண்டிலும் நல்ல வெற்றி பெறுவதற்கான அமைப்பு உள்ளது. இந்த வாரம் ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தூரத்தில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு ஏற்படும். உங்கள் செயல்பாடுகளில் அதிர்ஷ்டங்கள் ஆதரவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆபத்தான வேலைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 2

கன்னி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கவனமாக இருந்தால் சாதிக்கலாம்

துலாம் வார ராசிபலன்: சுப காரியங்களில் பங்கேற்பீர்கள்
துலாம் ராசி இந்த வாரம் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்களுடன் உங்களுக்கு பழக்கம் ஏற்படும். உங்களின் மரியாதையும் அதிகரிக்கும். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள்.

மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இந்த வாரம் சில நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும். சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 – நிதி நெருக்கடியை சாமாளிக்க தயாராகுங்கள்…
விருச்சிகம் வார ராசிபலன்: புதிய உற்சாகமும் பிறக்கும்
விருச்சிக ராசி இந்த வாரம் பல விஷயங்களில் அனுகூலமானதாக இருக்கும். கோபம் மற்றும் வெறித்தனத்தை நீங்கள் கட்டுப்படுத்துவது அவசியம். பிறர் உணர்வை மதித்து நடக்கவும்.

விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி – மிக அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள்

ஆன்மிகம் சார்ந்த செயல்களில் மனம் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல ஆதரவும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். புதிய உற்சாகத்துடன் எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடுவீர்கள். இது உங்கள் பணிகளை முடிக்க மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3

Source link

Leave a Comment